Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2016

ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைந்த நாடு எது தெரியுமா? இந்தியாவாம்!



ஆசியாவிலேயே இண்டர்நெட் வேகம் மிகவும் குறைந்த நாடு இந்தியா என்று இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இந்த புள்ளிவிபரத்தில், சராசரி வேகத்தில் 115-வது இடத்தை பிடித்துள்ளது இந்தியா.

இண்டர்நெட் வேகம் குறித்த பிரபல சர்வதேச புள்ளிவிபரம் "Fourth Quarter, 2015, State of the Internet Report" வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அகமை டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆண்டுதோறும் இந்த புள்ளிவிபர அறிக்கையை வெளியிடுவது வழக்கம். சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இண்டர்நெட் வேகம் எவ்வாறு உள்ளது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள இந்த புள்ளிவிபரம் முக்கியான ஒன்று.

அந்த புள்ளிவிபரத்தில், உலக அளவில் இண்டர்நெட்டின் சராசரி வேகம் 23 சதவீதம் அதாவது, 5.6 எம்.பி.பி.எஸ். அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் தென் கொரியா அதிகபட்சமாக 26.7 எம்.பி.பி.எஸ் வரை இண்டர்நெட் சேவையை வழங்கியிருக்கிறது. மிகக்குறைந்த சராசரி வேகத்தில் இண்டர்நெட் சேவையை கொண்டிருக்கும் நாடாக இந்தியா குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மொபைல் இண்டர்நெட் சராசரி வேகத்தில் பிரிட்டன் 26.8 எம்.பி.பி.எஸ். வேகத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்பெயின் 14 எம்.பி.பி.எஸ் வேகத்துடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஈரான் மற்றும் வியட்நாம் நாடுகள் மிகவும் குறைந்த வேகத்தில் மொபைல் இண்டர்நெட் சேவையை வழங்குகின்றன. அதிகபட்ச இண்டர்நெட் வேகத்தின் சராசரியில் சிங்கப்பூர் (135.7 எம்.பி.பி.எஸ்) முதலிடத்திலும் இந்தியா (21.2 எம்.பி.பி.எஸ்) கடைசி இடத்திலும் உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.