Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

பாறையை திருமணம் செய்து கொண்ட பெண் ”என்ன நடந்தாலும் நகராமல் இருக்கும்”


இங்கிலாந்தின் மிகப்பிரபல கலைஞர் டிராசி எமின்க்கு பாறையின் மீது தீராத காதல் ஏற்பட்டுள்ளது, இதனால் பாறையை திருமணம் செய்துகொண்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதனை உலகுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஹாங்ஹாங்கில் நடைபெற்ற கண்காட்சியில் வைத்து பண்டையகால பாறையை பார்த்த இவருக்கு அதன் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் தனிமையில் வாழ்ந்து வந்த அவர் பாறையை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் இப்போது தனியாக வாழவில்லை, பாறையை திருமணம் செய்துகொண்டு அதனுடன் தான் இருக்கிறேன். நாம் திருமணம் செய்துகொண்ட பாறை மிகவும் அழகாக இருக்கும், மேலும் என்ன நடந்தாலும் பாறை ஒரு இடத்தை விட்டு நகராமல் அந்த இடத்திலேயே இருப்பதால், அந்த பாறை எனக்காக காத்திருக்கும்.

உதாரணத்திற்கு, சுனாமி ஏற்பட்ட போது, பல்வேறு பொருட்கள் இடம்விட்டு இடம் மாறின நகர்ந்து போயின, ஆனால் பாறைகள் மட்டும் அப்படியே இருந்தன. எனவே பாறைகள் மிகவும் நல்லவை, அதனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது என்று கூறியுள்ளார்.

பாறையை திருமணம் செய்துகொண்டது முதல், காதல் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் நான் ஆர்வமாக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.