வெகு காலத்துக்கு முன் தென் தமிழ்நாட்டில் வடமேற்கு பகுதியில் ஒரு அழகான கிராமம் இருந்தது. கிராமத்தைச்சுற்றி பசுமை படர்ந்த மலைகளும், வாழைத் தோப்புகளும், தென்னை மரங்களும் நிறைந்திருந்து கிராமத்தை மேலும், மேலும் பொலிவூட்டின.
கிராமத்தில் பல சமயங்களை சேர்ந்த மக்கள் வசித்து வந்தாலும், அனைவரும் ஒற்றுமையாக சகோதர பாசத்துடன் வாழ்ந்து வந்தனர். கிராமத் தில் வசித்து வந்த அனைவருக்கும் விவசாயம் தான் முக்கிய தொழில். கிராமத்தைச் சுற்றி இருந்த மலைகளின் நடுவே பாய்ந்து வரும் அருவி நீர், விவசாயத்துக்கு தேவையான தண்ணீரை வருடம் முழுவதும் வாரி வழங்கி வந்தது.
கிராமத்து மக்கள் தங்கள் வீடுகளைச் சுற்றி இருந்த காலி இடங்களில், சிறு தோட்டங்கள் அமைத்து காய், கனிகளை பயிர் செய்து வந்தனர். அவர்கள் தங்கள் தோட்டங்களில் பயிராகும் காய், கனிகளை வாரம் ஒருமுறை பக்கத்து நகரத்தில் கூடும் சந்தையில் விற்று வந்தனர்.
ஒருசமயம் பல வேறுபட்ட சமயங்களை சேர்ந்த மூன்று நண்பர்கள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்களை விற்க சந்தைக்கு புறப்பட்டனர். வழியில் இளைப்பாற ஒரு மண்டபத்து நிழலில் தங்கினர். நிழலில் தங்கியவர்கள் வெயிலின் கடுமை சற்று தணியட்டும் என்று ஓய்வெடுத்தவாறு ஊர் விஷயங்களைப் பற்றிப் பேசினர்.
பேச்சு திடீர் என்று கடவுள் பக்கம் திரும்பியது. மூன்று நண்பர்களில் ஒருவர் சைவ சமயத்தை சேர்ந்தவர். அவர் தான் தழுவி உள்ள சைவம் தான் சிறந்தது என்று பெருமையாகப் பேசினார்.
அடுத்து இருந்த வைணவர், தான் சார்ந்துள்ள வைணவ சமயம் தான் உயர்ந்தது என்று வாதாடினார்.
இருவரின் பேச்சை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த புத்த மதத்தை பின்பற்றும் நண்பர், வாதாடிக் கொண்டிருந்தவர்களை அமைதியாக இருக்கச் சொன்னார்.
அவர் வைணவரையும், சைவ சமயத்தவரையும் பார்த்து, ''நண்பர்களே, நீங்கள் சார்ந்துள்ள உங்கள் சமயங்களை பற்றி உயர்வாக பேசினீர்கள். இப்போது நான் தழுவி உள்ள புத்த சமயத்தை பற்றி சொன்னால் நீங்கள் கண்டிப்பாக மறுக்க மாட்டீர்கள்,'' என்றார்.
''நான் சொல்லும் புத்த மத தத்துவங்கள் உங்களை கண்டிப்பாக கவர்ந்து விடும்,'' என்று நீண்ட நேரம் பேசியபடியே இருந்தார்.
அவர் பேசி முடித்த உடனே எதிரே இருந்த இரண்டு நண்பர்களும், ''தங்கள் சமயங்கள் தான் உயர்ந்தது,'' என்று உரத்த குரலில் வாதாட ஆரம்பித்தனர்.
பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, வாய் சண்டை வரை நீண்டு விட்டது. திடீர் என கூச்சலும், குழப்பமும் நிலவியதைக் கண்டு, மூன்று நண்பர்களுக்கு சற்று தள்ளி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் எழுந்து மூன்று நண்பர்களையும் தன்னருகே அழைத்தார்.
மூன்று நண்பர்களும் முதியவர் அருகில் சென்றனர்.
முதியவர் மூன்று நண்பர்களையும் பார்த்து, ''நண்பர்களே நீங்கள் இப்போது எங்கே சென்றுக் கொண்டிருக்கிறீர்கள்,'' என்று கேட்டார்.
மூவரும் எங்கள் தோட்டத்தில் விளைந்த காய்களை சந்தையில் விற்க, எடுத்துச் செல்வதாக கூறினர்.
''சந்தைக்கு வருபவர்கள் காய்கள் எப்படி இருந்தால் வாங்குவர்?'' என்று கேட்டார் முதியவர்.
''காய்கள் பச்சைப்பசேல் என்றும், நல்ல தரம் உள்ளதாக இருந்தால்தான் வாங்குவர்!'' என்று கூறினர் நண்பர்கள்.
முதியவர் நண்பர்களிடம், ''நீங்கள் எடுத்து செல்லும் காய்கள் எங்கு விளைந்தன!'' என்று கேட்டார்.
நண்பர்களும், ''எங்கள் தோட்டத்து நிலத்தில் விளைந்தன!'' என்று சொன்னார்கள்.
''உங்கள் நிலத்தில் உள்ள மண் ஒரே மாதிரியாக இருந்தாலும், அதில் விளைந்த காய்கள் விதவிதமாக இருப்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். சந்தைக்கு எடுத்து செல்லும் காய்களை வாங்குபவர் பச்சைப் பசேல் என்று உள்ள காய்களை தான் விரும்பி வாங்குவர். அவர்கள் இது சைவ சமயத்தை பின்பற்றுபவர் நிலத்தில் விளைந்தது, வைணவ மதத்தவர் நிலத்தில் விளைந்தது அல்லது புத்த மதத்தவருடைய நிலத்தில் விளைந்தது என்று யாரும் கேட்டு வாங்குவதில்லை. காய்களின் தரத்தை பார்த்துத்தான் வாங்குகின்றனர். இந்த காய் சாப்பிட்டால் குடல் புண் ஆறும், இதை சாப்பிட்டால் மூளை வளர்ச்சி அடையும் என்று காய்களின் தன்மையை அறிந்துதான் வாங்குகின்றனர்.
''எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஏழை எளியோருக்கு உதவி செய்து, ஒழுக்கத்துடன், நான் பெரியவன் என்ற கர்வம் இல்லாமல், எல்லா உயிர்களையும் சமமாக பாவிக்கும் குணமுடையவர்களையே கடவுளுக்கு மிகவும் பிடிக்கும்.
''கடவுள் எல்லா சமயத்தவருக்கும் பொதுவானவர். காய்களை வாங்குபவர்கள் எந்த சமயத்தவருடைய நிலத்தில் விளைந்தது என்று பார்த்து வாங்குவதில்லையோ. அது போல, கடவுளும் எல்லா சமயங்களை சேர்ந்தவர்களும் ஒன்று என்றுதான் நினைக்கிறார். அவர் எல்லா சமயத்தை சேர்ந்தவர்களையும் தன் பிள்ளைகளாக பாவித்து அவர்களுக்கு அருள் பாலிக்கிறார். இனிமேலாவது சமயத்தின் பெயரால் சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்,'' என்றார் முதியவர்.
இனி தாங்கள் வாழும் நாட்கள் பயனுள்ளதாக அமைய, தங்களுக்கு நல்லறிவு போதித்த முதியவரை வணங்கி, மன நிறைவோடு மூன்று நண்பர்களும் சந்தைக்கு புறப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.