Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

கிளென்சர்-பயன்பாடுகள் மற்றும் உபயோகிக்கும் முறை


பெண்களுக்கு ஏன் கிளென்சர் தேவைப்படுகிறது?

மிகவும் எண்ணெய் வழியும் முகமாக இருந்தால் சோப் அல்லது சாதாரண face wash உபயோகிக்கலாம். ஆனால், இவை சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை   எடுப்பதில்லை. பெரும்பாலான ஃபேஸ் வாஷ்களில் சோடியம் லாரல் சல்ஃபேட் (sodium laurel sulfate) உள்ளதால் சருமத்தின் இயற்கையான எண்ணெய் பசையை அது நீக்கி விடுகிறது. கிளென்சர் அழுக்கை நீக்கி, சரியான பி.ஹெச் பேலன்ஸை தக்க வைக்கிறது. இது சருமத்தை மிருதுவாக்கி, ஈரப்பதம் அழியாமலும் காக்கிறது.

கிளென்சர் இல்லாமல் எப்படிப்பட்ட அழகு சிகிச்சையும் சாத்தியமில்லை. சருமத்தில் சாதாரணமாக ஒரு க்ரீம் தடவ வேண்டும் என்றாலும் அதற்கு முன் கிளென்ஸ் செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். சரும அடுக்குகளின் ஆழத்தில் படிந்துள்ள அழுக்குகளை வெளியேற்ற அது அவசியம். சருமம் சுத்தமானால்தான் வெளிப்புறப் பூச்சாக நாம் உபயோகிக்கிற எதுவும் உள்ளே ஊடுருவும்.

கிளென்சர் மூலமாக கண்களில் போடும் மேக்கப்பை எப்படி நீக்கலாம்?

எந்த ஒரு மேக்கப்பையும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக சுத்தமாக எடுத்துவிட வேண்டியது அவசியம். கண்களில் போடுகிற மேக்கப்பும் விதிவிலக்கல்ல. காட்டன் துணியை தண்ணீரில் நனைத்துப் பிழியவும். அதில் சிறிது ஆயில் பேஸ்ட்  கிளென்சர் அல்லது கிளென்சிங் மில்க் எடுத்து கண்களில் 2 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்து பின்பு ஈரமான பஞ்சினால் துடைக்கவும்.

மேக்கப்பை கிளென்சரால் நீக்குவது எப்படி?


ஆயில் பேஸ்ட் கிளென்சரை  சிறிது எடுத்து முகம் முழுவதும் தடவவும். 5 நிமிடம் மசாஜ் செய்து ஈரமான பஞ்சினால் துடைத்து பிறகு தண்ணீரால் கழுவ வேண்டும்.

எப்படி கிளென்ஸ் செய்ய வேண்டும்?


கிளென்ஸ் செய்வதற்கு முன் 

உங்கள் கைகளை நன்கு கழுவவும். இவ்வாறு செய்வதால் தூசு உங்கள் சருமத்தின் உள்ளே செல்லாது. கண்களில் உள்ள   மேக்கப்பை  அகற்றவும். உங்கள் சருமத்துக்கேற்ற கிளென்சரை வட்ட வடிவத்தில் உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்கிற போது ரொம் பவும் அழுத்தம் கொடுக்காமல் மிதமாகச் செய்யவும். சில நிமிடங்கள் மசாஜ் செய்த பிறகு ஈரமான மற்றொரு பஞ்சினால் முகத்தைத் துடைத்து விடவும். வீட்டிலேயே செய்யலாம் கிளென்சர்!

மில்க் கிளென்சர்

பால் ஒரு இயற்கையான கிளென்சர். இது எல்லா விதமான சருமத்துக்கும் உகந்தது. முதலில் ஒரு கப் காய்ச்சாத குளிர்ந்த பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பஞ்சை அதில் முக்கி, அதை முகம், கழுத்து, நெற்றியில் தேய்க்கவும். இது காய்ந்தவுடன் திரும்பவும் ஒரு முறை செய்யவும். இதை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து பிறகு வாஷ் செய்யவும். இது சருமத்தை மிகவும் மிருதுவாக வைக்க உதவுகிறது.

கடலை மாவு, மஞ்சள் கிளென்சர்(எண்ணெய் வடியும் சருமத்துக்கு)

டேபிள்ஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து இத்துடன் பால் கலந்து பேஸ்ட் போல் செய்யவும். இதை முகம், கழுத்து, நெற்றி ஆகிய இடங்களில் தடவவும். இதை அல்லது 3 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த கிளென்சர் எண்ணெய் பசையான சருமத்துக்கு உகந்தது. பால், சருமத்துக்கு ஊட்டமளிக்கும். கடலை மாவு அதிகப்படியான எண்ணெய் மற்றும் மாசுக்களை நீக்கும்.

தயிர் மற்றும் தேன் கிளென்சர் (வறண்ட சருமத்துக்கு)

உலர் சருமத்துக்கு தயிர் மிகச்சிறந்த கிளென்சர் ஆகும். 1 டேபிள்ஸ்பூன் தயிருடன் 1 டீஸ்பூன் தேன் கலக்கவும். இதை முகம், கழுத்து, நெற்றியில் தடவி 2 நிமிடம் கழித்து குளிர் நீரில் கழுவவும்.

வெள்ளரி கிளென்சர் (சாதாரண சருமத்துக்கு)


வெள்ளரிக்காயை வட்ட வில்லைகளாக நறுக்கி முகத்தில் தேய்க்கவும். இதன் ஜூஸையும் தேய்க்கவும். 1 டேபிள்ஸ்பூன் வெள்ளரிச் சாறுடன் 1 டீஸ்பூன் தயிர் சேர்த்து முகம், கழுத்து, நெற்றியில் பூசவும். 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.

ரோஸ் வாட்டர் கிளென்சர்


பன்னீர் கொண்டு நெற்றி, கழுத்து, முகத்தை மிகவும் எளிதாக கிளென்ஸ் செய்யலாம். இது எல்லா வகையான சருமங்களுக்கும் உகந்தது.  படுக்க செல்லும் முன் தினமும் உபயோகிக்கலாம். 

தேன், முட்டை பாதாம் கிளென்சர்


மிகவும் உலர்ந்த சருமத்துக்கு இது சிறந்தது. முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து நன்கு அடித்துக் கொள்ளவும். இதில் 5 அல்லது 7 பாதாம் அரைத்த விழுதை சேர்த்து நெற்றி, முகம், கழுத்து ஆகிய இடங்களில் தடவவும். இதனை சிறிது நேரம் உலர வைத்து பிறகு வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

வைட்டமின் ஏ மற்றும் ஈ கிளென்சர்

அரை கப் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் கலக்கவும். பிறகு 1 கேப்ஸ்யூல் வைட்டமின் ஏ, ஒரு கேப்ஸ்யூல் வைட்டமின் இ இரண்டையும் உடைத்து அந்த தண்ணீரில் கலக்கவும். இதை உடனடியாக முகம், கழுத்து, நெற்றி ஆகியவற்றில் தடவவும். 2 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது மிகச் சிறந்த கிளென்சர் ஆகும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.