Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

கசகசா பட்டர் சிக்கன்


தேவையான பொருட்கள்: சிக்கன் - 1/2 கிலோ கசகசா - 150 கிராம் வெங்காயம் - 1 (நறுக்கியது) வெண்ணெய் - 150 கிராம் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன் கரம் மசாலா - 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன் கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு 
செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் கசகசா மற்றும் சிறிது உப்பு சேர்த்து 1 நிமிடம் மிதமான தீயில் வறுத்து இறக்கி, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், கறிவேப்பிலை, வெண்ணெய் சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனை போக வதக்க வேண்டும். 
பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து பிரட்டி, அதோடு உப்பு, மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். இறுதியில் அதில் பொடி செய்து வைத்துள்ள கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, குறைவான தீயில் மீண்டும் மூடி வைத்து சிக்கனை நன்கு வேக வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி பரிமாறினால், கசகசா பட்டர் சிக்கன் ரெடி!!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.