Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 27, 2016

வாஷிங்டன் அணு ஆயுத தாக்குதலின் கீழ் உள்ளது எச்சரிக்கை வீடியோ வெளியிட்ட வடகொரியா


உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது.  இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் மார்ச் 7- ஆம் தேதி முதல் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வடகொரியா அமெரிக்காவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோதனையை நடத்தியது. மேலும் நீண்ட தொலைவு பாயும் ஏவுகணைகளையும் சோதித்துப் பார்த்தது. இதற்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வடகொரியாவின் அதிகாரபூர்வ ஊடகமான கேசிஎன்ஏ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எதிரி நாடுகள் எங்களுக்கு சவால் விடுக்கின்றன.

அதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். போர் மூண்டால் தென்கொரியா தலைநகர் சியோல் உட்பட அந்த நாடு முழுவதையும் எரித்து சாம்ப லாக்குவோம்.

தற்காப்புக்காக வடகொரிய ராணுவமும் தற்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் வட கொரியா அணு ஆயுத தாக்குதலின் கீழ் வாஷிங்டன் இருப்பதாக கூறி கடைசி வாய்ப்பு என்ற  பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.4 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் அமெரிக்க- கொரியா உறவுகளின் வரலாறு காண்பிக்கபட்டு உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம் நம்மை நோக்கி  ஒரு அங்குலம் நகர்ந்தாலும்  உடனடியாக அவர்களை அணுஆயுதம்மூலம் தாக்குவோம் என கூறபட்டு உள்ளது.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.