Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

ஆன்லைனில் பரவும் ஈபிள் கோபுரம் தகர்க்கப்படும் வீடியோ காட்சி: ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டனர்


ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. சமீபத்தில் ஆன்லைனில் ‘வீடியோ கேம்’ ஒன்றை வெளியிட்டனர்.

அதில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் ‘ஈபிள் கோபுரம்’ குண்டு வைத்து தகர்க்கப்பட்டு தரையில் சாய்வது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

பின்னர் ரத்த ஆறு ஓடி அது அமெரிக்காவின் டாலர் நோட்டுகள், துப்பாக்கிகள், கத்திகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் வைக்கப்பட்டுள்ள மர மேஜையின் மீது துளிதுளியாக விழுவது போன்று அனிமேசன் செய்யப்பட்டுள்ளது.
அந்த வீடியோவுக்கு ‘அவநம்பிக்கை மேற்கத்திய நாடுகள்’ என தலைப்பிட்டுள்ளனர். இவை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் வாசகங்களுடன் ஒளிபரப்பானது.

மேலும் ஆன்லைனில் அடுத்தபடியாக எந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதரவாளர்களிடம் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் அடுத்தபடியாக இங்கிலாந்து மீது தாக்குதல் நடத்த அதிக ஆதரவு வாக்குகள் விழுந்தன. மேலும் அடுத்தபடியாக ஈபிள் கோபுரத்தில் எந்த கலரில் வெளிச்சம் வீச செய்ய வேண்டும் என்றும் ஆன்லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

ஏனெனில் சமீபத்தில் பிரசல்ஸ் நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஈபிள் கோபுரத்தில் பெல்ஜியம் தேசிய கொடியின் நிறம் விளக்குகள் மூலம் ஒளிரூட்டப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.