கால மாற்றத்திற்கு ஏற்ப பழிவாங்கும் முறைகளும் மாறி வருகிறது. இன்றைய இளைய தலைமுறையின் உணவு, உடை போன்ற அடிப்படை தேவைகளுக்கு அடுத்தபடியான முக்கிய தேவையாக இருப்பது ஸ்மார்ட் போன்களும், டாப்லேட், இசை கேட்க பயன்படும் கருவிகளும், கணிணிகளும் தான். ஒருவரை பழிவாங்க இவற்றையே ஒரு ஆயுதமாக பயன்படுத்த முடியும் என நிருபித்துள்ளார் ஜப்பானை சேர்ந்த பெண் ஒருவர். தனது காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு, வேறு ஒரு பெண்ணுடன் பழகுவதை கண்டுபிடித்த அப்பெண், கட்டுக்கடங்காத கோபத்தில் காதலனை பழிவாங்க முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி காதலனின் வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த ஐ பேட், ஐ மேக், இரண்டு ஐ போன்கள் மற்றும் ஒரு ஜோடி மேக்புக் ஆகியவற்றை தண்ணீர் தொட்டியில் தூக்கி வீசியுள்ளார். பின்னர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அவற்றை தனது போனில் படமாகவும் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார். தன்னை மனரீதியாக துன்பத்தில் தள்ளிய காதலனை, பண ரீதியாக துன்பத்தில் தள்ளிய மகிழ்ச்சியில் அந்தப் பெண், மற்ற ஏமாற்றுக்கார காதலர்களையும் எச்சரித்திருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.