Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 25, 2016

பேச்சுக் குறைபாடுள்ள பிள்ளைகளில் உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும்


ஏனைய விலங்குகளில் இருந்து மனித இனத்தை வேறுபடுத்திக் காட்டுவது பேச்சுத் திறனும், மொழித்திறனும் ஆகும். பெரும்பாலான குழந்தைகள் 3 வயதிற்குள் எவ்வித பயிற்சிகளும் இல்லாமல் பேசக் கற்றுக் கொள்கின்றன. கேட்டல் திறன் பாதிப்பான பிள்ளையின் பாதிப்பின் அளவைப் பொறுத்தே அதன் பேசும் திறன் அமையும்.
வகுப்பறையில் மொழி மற்றும் பேச்சுக் குறைபாடுள்ள பிள்ளைகளைக் காணலாம். அவர்கள் கவனத்திற்படாது போகின்றனர். இவ்வாறானவர்கள் பேசும் போது எழுத்துகளையோ வார்த்தைகளையோ சொற்களையோ விட்டு விடுகின்றனர். கூட்டியோ குறைத்தோ பேசுகின்றனர். முழுவாக்கியங்களைப் பேசும் போது திக்குகின்றனர். நீண்ட இடைவெளி விட்டுப் பேசுகின்றனர். இவ்வாறானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனம் கண்டு குறைபாட்டைப் போக்க பாடசாலையில் ஆசிரியரும் வீட்டில் பெற்றோரும் முயற்சித்தல் வேண்டும்.
பேச்சுக் குறைபாடுகளை உச்சரிப்பில் உள்ள குறைபாடுகளை உச்சரிப்புக் குறைபாடு, குரலில் உள்ள குறைபாடு, பேச்சுத் தரத்தில் உள்ள குறைபாடு என்று வகைப்படுத்தி நோக்கலாம். உச்சரிப்பில் உள்ள குறைபாடுகள் வருமாறு:
சேர்த்தல், திரித்திக் கூறுதல், ஒன்றுக்குப் பதிலாக இன்னொன்றைப் பயன்படுத்தல், விட்டு விடுதல்
குரலில் உள்ள குறைபாடுகள் வருமாறு:
குரல் தொனியில் ஏற்றம், குரல் தொனியில் தாழ்வு
பேச்சுத் தரத்தில் உள்ள குறைபாடுகள் வருமாறு:
திக்குதல், ஓசை வித்தியாசமாக இருத்தல்
உச்சரிப்பில் உள்ள குறைபாடுகளை சுருக்கமாக இவ்வாறு ஆராயலாம்.
பேச்சுத்திறனுக்கு இன்றியமையாதது பேசும் மொழிகளாகும். பேசும் உறுப்புக்களாகிய நாக்கு, உதடு, தாடைகள், மேல்வாய் ஆகியவை முறையாக இயங்கும் போது உச்சரிப்பு தெளிவாக இருக்கும். சாதாரண குழந்தை 07 வயதிற்குள் பேசும் திறனை சிறந்த முறையில் பெற்றிருக்கும்.
சிலவேளை பிளவுபட்ட உதடுகள் உள்ள குழந்தைகள் உச்சரிப்பதற்கு சிரமப்படலாம். இவ்வாறானவர்களை மருத்துவர் சிகிச்சைக்கு உட்படுத்துவதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
சில பிள்ளைகளுக்கு பேசும் உறுப்பால் எவ்வித குறைபாடும் இருக்காது. ஆனால் பேச்சு தெளிவாக இருக்காது. இதற்குக் காரணம் செவித்திறன் பாதிப்பாகும். இவ்வாறானவர்களுக்கு பேச்சுப் பயிற்சியாளரன் உதவியைப் பெறுவதன் மூலம் பேச்சுத் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
சொற்களை எழுத்துவிட்டு உச்சரித்தல்: புதிய சொற்களை வாசிக்கும் போதும் கவனமின்றி வாசிக்கும் போதும் தவறான உச்சரிக்பை பின்பற்றுவதன் மூலம் இக்குறைபாடு ஏற்படும். இதனை நிவர்த்தி செய்ய தவறாக உச்சரிக்கும் போது உடனடியாக கரும்பலகையில், அட்டையில் நிற எழுதுகோலைப் பயன்படுத்தி எழுதி விசேடமாக உச்சரிக்கச் செய்யலாம். இவ்வாறான குறைபாடு உள்ள பிள்ளைகளுக்கு குறைந்த வேகத்தில் உச்சரிக்க வைப்பதும், எழுத்துக்களிலான பல விதசொற்களை அமைக்கும் விளையாட்டுக்களை ஒழுங்கு செய்து வழிப்படுத்துவதும் ஆசிரியரின் பணியாகும்.
விட்டு விடுதல்: சில எழுத்துக்களின் உச்சரிப்பை சொல்லச் சங்கடப்படுவதால் பிள்ளைகள் அவற்றை அப்படியே விட்டுவிடும் இதற்கும் பயிற்சி அவசியம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.