Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

உலகின் பழமையான பத்து நகரங்கள்


மனித இனம் என்பது மிக எளிமையாக தோன்றிய இனம் அல்ல. கற்காலம் முதல் இந்த கணினி யுகம் வரையிலான வளர்ச்சிக்கு இடைப்பட்ட பல ஆயிர வருடங்கள் இருக்கின்றன. உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து, மிக வேகமாக அழியப் போகும் இனம் மனித இனம் தான்.
மனித இனத்தின் தனித்தன்மை ஆறாம் அறிவு. அதை வைத்து தான் நாம் இவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகளை அறிந்து வருகிறோம். இதனால் கிடைத்த நன்மைகளை விட, தீமைகள் தான் அதிகம் என்பது யாராலும் மறுக்க முடியாத. ஆரம்பக் காலாத்தில் மனிதன் மிகவும் கடினப்பட்டு உருவாக்கியது சமூகமாக ஒன்றுகூடி வாழ்வது தான்.
இதற்கான முதல் படியாக இருந்தது தான் நகர கட்டமைப்பு. இந்த வகையில் உலகின் பழமையான நகரங்கள் என்று கூறப்படும் பத்து நகரங்களை பற்றி இனிக் காண்போம்…
பெய்ருட், லெபனான்
லெபனானின் தலைநகர் தான் பெய்ருட். இது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டமைக்கப்பட்ட நகராகும். இது வர்த்தகத்திற்கு பெயர்போன இடமாக இருந்தது என வரலாற்று கூற்றுகள் கூறுகின்றன.
காஜியண்டெப், துருக்கி
துருக்கி நாட்டில் இருக்கும் ஓர் முக்கிய நகரம் இந்த காஜியண்டெப். இந்நகர் இதற்கு முன்பும், இப்போதும் பேச்சுவழக்கில் அன்டேப் என அழைக்கப்படுகிறது.
பிளோவிடிவ், பல்கேரியா
பிளோவிடிவ், பல்கேரியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகும். இது ரோமர்கள் ஆட்சியில் மிக முக்கிய நகர்களில் ஒன்றாக திகழ்ந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சீதோன், லெபனான்
லெபனான் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய நகரம் இந்த சீதோன். இந்நகரம் ஏறத்தாழ 6,000 ஆண்டுகளுக்கு முன்னராக கட்டமைக்கப்பட்ட நகராகும்.
ஃபயும், எகிப்து
எகிப்தின் மத்திய பகுதியில் அமைந்திருக்கும் நகர் தான் இந்த ஃபயும் (fayum). பண்டைய காலத்தில் இந்த நகரம் ஷீதேட் என அழைக்கப்பட்டு வந்துள்ளது. எகிப்தின் பழமையான நகரங்களில் இதுவும் ஒன்று.
சுசா, ஈரான்
எலமைட் பேரரசின் தலைநகராக இருந்துள்ளது சுசா எனும் இந்த நகரம். பிறகு முதல் பெர்ஷியன் பேரரசால் இது கையகப்படுத்தப்பட்டது.
டமாஸ்கஸ், சிரியா
டமாஸ்கஸ் சிரியாவின் இரண்டாவது பெரும் நகர் மற்றும் தலைநகராக திகழ்ந்து வருகிறது.
அலெப்போ, சிரியா
அலெப்போ தான் சிரியாவின் மிகப்பெரியா நகராகும். மேலும், இது தான் மக்கள் தொகை அளவிலும் சிரியாவில் முதல் இடத்தில் இருக்கிறது.
பைப்லோஸ், லெபனான்
பைப்லோஸ் எனும் இந்நகரம் 8800 பி.சி-யிலேயே கட்டமைக்கப்பட நகரம் என கூறப்படுகிறது. இது யுனெஸ்கோவினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.