01. அழகான புல்
உண்மையான அன்பும், பாசமும் உள்ளவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்பதில் ஒருவனுக்குத் திடீரென்று சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவன் தன் குருவிடம் சென்று இந்தச் சந்தேகத்தைக் கேட்டான்.
இவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்த அவர், ''நீ இங்குள்ள பூங்காவிற்குச் செல். அங்குள்ள தரையில் அழகிய புற்கள் பச்சைப் பசேல் என்று விரிந்து பரந்து இருப்பதைப் பார். அதன் வழியாக நீ நடந்து செல். அந்தப் புற்களில் மிகவும் அழகான புல் எது என்பதைத் தேர்வு செய்து அதனைப் பறித்து என்னிடம் எடுத்து வா. ஆனால், ஒரு நிபந்தனை. நீ நடந்து செல்கிற பாதையை எக்காரணம் கொண்டும் திரும்பிப் பார்க்கக் கூடாது,'' என்று கூறினார்.
தான் கேட்ட கேள்விக்கும், இதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை. இருந்தாலும் குருவாயிற்றே! அவர் சொல்படி நடப்பதுதான் சரி என்று முடிவெடுத்தான். நேராகப் பூங்காவிற்குச் சென்றான்.
பூங்கா முழுவதும் சுற்றித் திரிந்துவிட்டு, குருவிடம் திரும்பி வந்தான்.
''நீ பறித்த புல்லைக் கொடு,'' என்று கேட்டார்.
அதற்கு அவன், ''நான் புல் எதுவும் பறிக்கவில்லை,'' என்று பதிலளித்தான்.
''ஏன், எந்தப் புல்லுமே உனக்கு அழகாகத் தெரியவில்லையா?'' என்று கேட்டான்.
''அப்படி இல்லை குருவே. நான் ஒவ்வொரு புல்லையும் பார்த்துக் கொண்டே நடந்தேன். அழகாகவே இருந்தது. இருந்தாலும் அடுத்ததாகப் பார்க்கும் புல் இதை விட அழகாக இருந்தாலும் இருக்கலாம் என்று நினைத்துக் கடைசி வரை நடந்து விட்டேன். நீங்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்று கூறியிருந்ததால் அழகான புல்லை என்னால் தேர்வு செய்ய முடியாமல் போய்விட்டது,'' என்று வருத்தத்துடன் கூறினான்.
அவன் அறியாமையை நினைத்து வருத்தப் பட்டார் குரு.
''நம் மீது உண்மையான பாசமும், அக்கறையும் கொண்டிருப்பவர்கள் நம் அருகிலேயே இருக்கும்போது, அவர்களை விடச் சிறந்தவர்களைத் தேடி அலைந்து காலத்தை வீணடிக்கிறோம்,'' என்ற தத்துவத்தை எடுத்துரைத்தார்.
தன் அறியாமையை உணர்ந்தான் அவன்.
02. கோபம்!
அது ஒரு பெரிய நிறுவனம். நூற்றுக்கணக்கானோர் அங்கு பணியாற்றினர்.
ஒருநாள் அதன் மேலாளர் திடீரென்று ஒவ்வொரு துறையாகச் சென்று சோதனையிட்டார். அப்போது ஒரு அறையில் மேஜை மறைவில் யாரோ படுத்து உறங்குவது போலத் தெரிந்தது. வேகமாக அங்கு சென்று பார்த்தார்.
ஒருவன் கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான். மேலாளர் வந்திருப்பதாக சிலர் உரக்கக் கத்தியும், அவன் உறக்கம் கலையாமல் ஆழ்ந்திருந்தான்.
அவருக்குக் கடுமையாகக் கோபம் வந்துவிட்டது. அவனைக் காலால் உதைத்து எழுப்பினார். உறக்கக் கலக்கத்தில் எழுந்தவன், பேந்தப் பேந்த விழித்தான்.
''தம்பி, நீ மாசம் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?'' என்று பற்களை நறநறவென்று கடித்தவாறு கேட்டார்.
''மூவாயிரம் ரூபாய் சார்!'' என்றான் அவன்.
''அப்படியா!'' என்றவர், தனது சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்து அவனிடம் நீட்டினார்.
''இதில் பத்தாயிரம் ரூபாய் இருக்கிறது. நீ வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம். உடனே இடத்தைக் காலி செய். நன்றாக நீட்டி மடக்கிக் கிடந்து உறங்குவதற்காக இந்த நிறுவனத்தை நான் நடத்தவில்லை புரிகிறதா?'' என்று சீறினார்.
அந்த இளைஞனும் சந்தோஷமாக அந்தப் பணத்தை வாங்கி கால்சட்டைப் பைக்குள் திணித்தபடி கிளம்பிச் சென்றுவிட்டான்.
ஒருவாறாகக் கோபம் அடங்கிய அந்த மேலாளர், அப்புறம் அக்கவுண்ட்ஸ் மேலாளரிடம், ''யார் இந்தப் பையன்? அவனுடைய கணக்கு முழுவதையும் உடனே முடித்து விடு,'' என்று உத்தரவிட்டார்.
அதற்கு அந்த அக்கவுண்ட்ஸ் மேலாளர், ''அவன் ஊழியர்களுக்கு டீ கொண்டு வந்த பையன் சார்...'' என்றார் மெதுவாக.
கோபத்தால் ஏற்பட்ட இழப்பை எண்ணி, வருந்தினார் மேலாளர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.