Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

கொள்ளும், குத்துவெட்டும்!-சிறுகதை


ஒரு சலவைத் தொழிலாளி, அழுக்கு மூட்டைகளை கழுதைகளின் மேல் ஏற்றிக் கொண்டு, ஏரிக்கு சென்றான். 
அங்கே போனதும், அழுக்கு மூட்டைகளை இறக்கி விட்டு, கழுதைகளின் முன்னங்கால்களை மட்டும் கட்டி மேய விட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும், புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.
இதைக் கண்ட கழுதைகள், ''இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும்,'' என்று முடிவு செய்தன.
சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப் படை அங்கே வந்தது. போர் மூண்டது.
பல குதிரைகளுக்கு குத்தும், வெட்டும் விழுந்தன. கால்கள் முறிந்தன.
இதை பார்த்த கழுதைகள் ''நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம்,'' என்று உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன.
'நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர் பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்ட கழுதைகள் தங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை போதும்' என்று நினைத்தன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.