பெரியகுளம் கிராமத்தில் வசிக்கும் பரசுராம் என்ற உழவனுக்கு ஒரு மகன் இருந்தான். அவன் சரியான முட்டாள். தன் மகனின் இயல்பை அறிந்த பரசுராம் எங்கு சென்றாலும் மகனைத் தன்னுடன் அழைத்துச் செல்வது இல்லை.
ஒருநாள்-
''உனக்கு ஒரு வேலை தந்தால் பொறுப்பாகச் செய்வாயா?'' என்று கேட்டார்.
''அப்பா! நீங்கள்தான் என்னை முட்டாள் என்று நினைத்து எந்த வேலையும் தருவது இல்லை. என் திறமையைக் காட்டி உங்களிடம் நல்ல பெயர் வாங்குகிறேன். என்ன வேலை? சொல்லுங்கள்,'' என்று கேட்டான் மகன்.
''நான் சொல்வதைக் கவனமாகக் கேள். நம் வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தின் உயரத்திற்கு கதிரவன் எப்போது வருகிறது என்று பார். நம் கன்றிற்கு உணவிட வேண்டிய நேரம் அது. அதன் உணவைத் தொட்டியில் கரைத்து வைத்து விட்டால் அது சாப்பிட்டு விடும். இதுதான் நீ செய்ய வேண்டிய வேலை,'' என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
'தந்தை சொன்னதை அப்படியே நிறைவேற்ற வேண்டும். அவரிடம் நல்ல பேர் வாங்க வேண்டும்' என்று நினைத்தான் முட்டாள் மகன்.
தோட்டத்தில் இருந்த மரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மரத்தின் உயரத்திற்கு கதிரவன் வந்ததும் எழுந்தான். கன்றிற்குத் தேவையான உணவைத் தொட்டியில் கரைத்தான்.
இதைப் பார்த்ததும் கன்றுக் குட்டி அவன் அருகே வந்தது. ஆனால், அவனோ தொட்டியைத் தூக்கியபடி மரத்தில் ஏறினான். அந்தத் தொட்டியை மரத்தில் இருந்த கிளையில் கட்டினான்.
பசியால் வாடிய கன்றுக் குட்டி மரத்திலிருந்த தொட்டியைப் பார்த்தது. வேறு வழியின்றி அந்த மரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது.
மரத்தின் மேலிருந்த அவன், ''உன் உணவு இங்கே இருக்கிறது. மரத்தின் மேல் ஏறி வந்து சாப்பிடு,'' என்று கன்றுக் குட்டியைப் பார்த்து குரல் கொடுத்தான்.
ஆனால் கன்றுக் குட்டி சுற்றிச் சுற்றி வந்ததே தவிர மரத்தில் ஏறவில்லை. கோபம் கொண்ட அவன் மரத்தின் கிளைகளை உலுக்கியவாறு உரத்த குரலில், ''மரத்தில் ஏறு'' என்று கத்தினான்.
கிளைகள் உலுக்கப்பட்டதால் அதில் இருந்த எறும்புகள் கூட்டமாக அவனைக் கடிக்கத் தொடங்கின. வலி தாங்க முடியாமல் தவித்த அவன் மரத்தில் இருந்து கீழே இறங்கத் தெரியாததால், தலைகுப்புறக் கீழே விழுந்தான்.
அருகே வந்த கன்றுக் குட்டி அவன் வயிற்றை நாவால் நக்கியது.
எரிச்சல் அடைந்த அவன், ''உனக்கு உரிய உணவை மரத்தில் ஏறி உண்ணாமல் என்னையா நக்குகிறாய். உன்னை என்ன செய்கிறேன் பார்,'' என்று கத்தியவாறு பக்கத்தில் கிடந்த தடியால் கன்றுக் குட்டியை ஓங்கி அடித்தான்.
கன்றுக் குட்டி அங்கேயே செத்து விழுந்தது.
வீடு திரும்பிய உழவன் கன்றுக் குட்டி இறந்து கிடப்பதையும், கிளையில் தொட்டி மாட்டப் பட்டு இருப்பதையும் கண்டான். அதிர்ச்சி அடைந்து, ''என்னடா நடந்தது?'' என்று மகனைக் கேட்டான்.
''அப்பா! நீங்கள் சொன்னபடியே கதிரவன் மரத்தின் உயரம் வந்ததும் கன்றுக்குப் போட வேண்டிய உணவைத் தொட்டியில் கரைத்தேன். பிறகு அந்தத் தொட்டியை இந்த மரத்தின் கிளையில் மாட்டினேன். நான் என்ன முயற்சி செய்தும் இந்தக் கன்றுக்குட்டி மரத்தின் மேல் ஏறவில்லை. கோபத்தில் நான் இதை அடித்தேன்,'' என்று நடந்ததைச் சொன்னான்.
'மகனின் முட்டாள் தனத்தால் கன்றுக் குட்டியை இழந்தேனே...'என்று தலையில் அடித்துக் கொண்டார் பரசுராம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.