Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

எச்ஐவிக்கு விரைவில் மருந்து?


எச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸை மனித டிஎன்ஏவில் இருந்து வெற்றிகரமாக பிரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
எச்.ஐ.வி. வைரஸுக்கு மாற்று மருந்து கண்டிபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்த சாதனை இந்த வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க வழிவகுத்துள்ளது. மனித உடலில் புகுந்து நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் எச்.ஐ.வி. வைரஸ், நோய்கள் பலவற்றால் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கி எய்ட்ஸ் எனப்படும் இறுதி நிலையை எட்டுகிறது.
டி.என்.ஏ அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸை முற்றிலும் அழிக்கும் வகையில் எந்த ஒரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் அளவிலான மருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த கண்டுபிடிப்பு நோய் தடுப்பு மறந்து கண்டுபிடிப்பில் முக்கிய மைல்கல் என்று டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவத் துறை பேராசிரியர் கமீல் காலிலி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.