பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சிற்றூரில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஏழு பிள்ளைகள் இருந்தனர். கடைசியாக ஒரு பெண் பிறந்தாள்.
ஏழு மகன்களும், அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால், கடைசியாகப் பிறந்த பெண் மட்டும் நோஞ்சானாக இருந்தாள். அவள் நீண்ட நாள் வாழ்வது கடினம் என்று தந்தை கருதினார்.
ஒருநாள்- தன் மகன் ஒருவனை விரைந்து சென்று கிணற்று நீரை ஒரு குவளையில், கொண்டுவருமாறு சொன்னார். ஆனால், அந்த ஒருவனைப் பின்பற்றி மற்ற ஆறு பேரும் ஓடினர்.
யார் முதலாகத் தங்கள் தங்கைக்குத் தண்ணீர் கொண்டு வருவது என்பதில் அவர்களுக்குள் போட்டா போட்டி. அவர்கள் வந்த வேகத்தில் தங்கள் குவளைகளைக் கிணற்றுக்குள் போட்டு விட்டனர்.
இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் அவர்கள் விழித்தனர். தண்ணீர் இல்லாமல் சென்றால் தந்தை அடிப்பார் என்று பயந்தனர்.
தந்தையோ வீட்டில் பதற்றத்தோடு இருந்தார். "ஏன் அவர்கள் இவ்வளவு நேரம் ஆகியும் வரவில்லை' என்று கவலைப்பட்டார்.
"ஏழு பேரும் வழியில் ஏதோ விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும். அதில், அவர்கள் தண்ணீர் கொண்டு வருவதைக் கூட மறந்து விட்டனர்' என்று அவர் கருதினார். நேரம் ஆக, ஆக அவர்கள் வராமல் போனதால், அவருக்கு மிகுந்த கோபம் வந்தது. அந்த ஏழு பேரையும், ""நீங்கள் காகங்களாக மாறுங்கள்,'' என்று சபித்து விட்டார்.
அவர் அப்படிச் சொன்னாரோ இல்லையோ உடனடியாக, அந்தப் பிள்ளைகள் அனைவரும் காகங்களாக மாறி விட்டனர்.
அந்த எழுவரும் அண்டங்காக்கைகளாக வீட்டை சுற்றிச் சுற்றிப் பறந்து வந்தனர். தந்தை அவற்றைப் பார்த்தார். தன் சாபம் பலித்து விட்டதை நினைத்து வருந்தினார். அவர்களை மீண்டும் மனிதராக அவரால் மாற்ற முடியவில்லை. அதற்காக வருந்தினார்.
ஏழு பிள்ளைகளை அவர் இழந்து விட்டார். ஆனாலும், நாளுக்கு நாள் அவர் மகள் மட்டும் தேறி, அழகு தேவதையாக மாறி வந்தது, அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
பல நாள்களாக அந்தப் பெண்ணிற்கு அண்ணன்மார்கள் இருந்தது தெரியாது. தாயும், தந்தையும், அவளுக்கு அண்ணன்கள் எழுவர் இருந்தனர் என்பதைச் சொல்லாமல், மறைத்து விட்டனர்.
எதிர்பாராத விதமாக, அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் இவளுக்கு அண்ணன்கள் இருந்த கதையைப் பற்றிச் பேசி கொண்டனர். அவர்கள், "அதோ, அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள். ஆனால், பாவம் அவளைக் காப்பாற்ற நினைத்த அந்த ஏழு அண்ணன்களும் இல்லாமல் போய் விட்டனர்,'' என்றனர்.
இதைக் கேட்ட அவள் மிகவும் வருந்தினாள். தாய் தந்தையிடம் சென்றாள்.
"தனக்கு அண்ணன்கள் எழுவர் இருந்தனரா? அவர்களுக்கு என்ன ஆயிற்று சொல்லுங்கள்?'' என்று வினவினாள்.
இதற்கு மேலும், மறைக்க முடியாது என்று கருதிய அவர்கள், உண்மையைச் சொல்லி விட்டனர்.
"நாம் என்ன செய்வது? அது விதி. நீ வந்த நேரம், அந்த ஏழுபேரும் போய் விட்டனர்,' என்றனர்.
அவள் அவர்களைப் பற்றி நாள்தோறும் நினைத்து வருந்தினாள். தன் அண்ணன்களை எப்படியாவது மீட்டுக் கொண்டு வரவேண்டும் என்று விரும்பினாள்.
ஊண் இல்லை; உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை. கவலையிலேயே நாட்களைக் செலவழித்தாள்.
ஒருநாள் யாருக்கும் தெரியாமல், தன் அண்ணன்களைத் தேடிப் புறப்பட்டு சென்றாள். எங்கிருந்தாலும், எப்பாடு பட்டேனும் அவர்களை மீட்டுவருவேன் என்று உறுதியாக இருந்தாள்.
தாயும், தந்தையும் அவளுக்குக் கொடுத்திருந்த ஒரு மோதிரம், பசியெடுத்தால் உண்பதற்காக ஒரு ரொட்டி, தாகம் எடுத்தால் அருந்துவதற்காக ஒரு குடுவையில் கொஞ்சம் தண்ணீர், போகிற இடத்தில் உட்கார வேண்டியிருந்தால், பயன்படும் என்று ஒரு முக்காலி என இந்த நான்கை மட்டும் எடுத்துக் கொண்டாள்.
அண்ணன்களைத் தேடி நடந்தாள், நடந்தாள், நடந்துகொண்டே இருந்தாள். உலகத்தின் எல்லைக்கே வந்து விட்டாள். அங்கே சூரியனைப் பார்த்தாள். அவன் மிகுந்த வெப்பமாகவும், கோபமாகவும் இருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அதனால் அவனை விட்டுவிட்டு மேலும் சென்றாள்.
சந்திரனைப் பார்த்தாள். அதுவோ சில்லென்றும், குளிர்ச்சியாகவும் இருந்தது. இங்கே ரத்தமும், சதையும்தான் இருக்கிறது என்று நினைத்தபடியே மேலும் சென்றாள்.
அங்கே விண்மீன்கள் இருந்தன. அவை இருக்கைகள் மீது அமர்ந்திருந்தன.
இவள் கதையைக் கேட்டு காலை எழும் வெள்ளிமீன், ஒரு சின்ன மரத்துண்டைக் கொடுத்து, "இதைப் பத்திரமாக வைத்திரு. நீ இதனை இழந்தால், தூரத்தில் இருக்கும் அந்தக் கண்ணாடி மலையின் மேலுள்ள கோட்டையை உன்னால் திறக்க முடியாது. அங்கேதான் உன் அண்ணன்கள் இருக்கின்றனர்,'' என்றது.
சிறுமி அந்த மரத்துண்டை ஒரு துணியில் சுற்றி கையில் எடுத்துக் கொண்டு சென்றாள். கண்ணாடி மலையை அடைந்தாள். அதன் கதவுகள் மூடியிருந்தன. அவளுக்கு அந்த மரத்துண்டு நினைவுக்கு வந்தது. கையிலிருந்த துணியைப் பிரித்தாள்.
"ஐயோ' அந்த மரத்துண்டு அங்கே இல்லையே... மிகுந்த வருத்தம் கொண்டாள். நல்ல வெள்ளி மீன் நமக்குக் கொடுத்த பரிசை இழந்து விட்டோமே' என்று கவலைப்பட்டாள்.
தன் அண்ணன்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். கையிலோ கண்ணாடி மலையிலுள்ள கோட்டையைத் திறக்க உதவும் மரத்துண்டு இல்லை. என்ன செய்வது? என்று யோசித்தாள். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.
அந்த மரத்துண்டு தன் சுண்டுவிரல் அளவு தான் இருக்கும் என்பது நினைவுக்கு வந்தது. ஒரு கத்தியை எடுத்துச் சிறிதும் தயங்காமல் தன் சுண்டு விரலை வெட்டினாள். கதவில் செருகிச் சுற்றினாள். என்ன வியப்பு.
அந்தக் கதவு திறந்து கொண்டது. உள்ளே நுழைந்தாள். அங்கே ஒரு குள்ளன் இருந்தான்.
"எதைத்தேடி இங்கே வந்தாய்?'' என்று கேட்டான்.
"ஏழு காகங்களாக மாறியுள்ள என் அண்ணன்களைத் தேடி வந்திருக்கிறேன்,'' என்றாள்.
உடனே குள்ளன், ''என்னுடைய முதலாளிகள் அவர்கள். வெளியே போயிருக்கின்றனர். தயவு செய்து உள்ளே வந்து சிறிது நேரம் அமருங்கள்,'' என்றான்.
அவன் உள்ளே சென்று அந்த ஏழு பேருக்கும் சாப்பாடு தயார் செய்தான். ஏழு சிறிய தட்டுகளில் அவற்றை வைத்தான். சின்னச் சின்ன கண்ணாடிக் குவளையில் தண்ணீர் கொண்டு வைத்தான்.
மேசையில் அடுக்கி வைத்திருந்த அந்தத் தட்டுகளிலிருந்து கொஞ்சம் உணவையும், ஒவ்வொரு குவளைகளிலிருந்தும் சிறிது தண்ணீரையும் உண்டாள்.
கடைசிக் குவளையில் தன் கையிலிருந்த மோதிரத்தை நழுவ விட்டாள்.
திடீரென்று காற்றில் படபடப்பும், காகங்கள் கரைகின்ற ஒலியும் கேட்டன.
"இதோ என் முதலாளிகள் வந்துவிட்டனர்,'' என்றான் குள்ளன்.
இதைக் கேட்டதும், அவள் உள்ளே சென்று ஒளிந்து கொண்டாள்.
உள்ளே நுழைந்த அவர்கள் உணவைச் சாப்பிட ஆரம்பித்தனர். தண்ணீரையும் குடித்தனர். அப்போது ஒவ்வொருவராக, ""என் தட்டிலிருந்து யாரோ சாப்பிட்டிருக்கிறார்கள். யாரது? என் குவளையிலிருந்து யாரோ தண்ணீர் குடித்திருக்கிறார்கள் யாரது?'' என்று கேட்டனர்.
ஏழாவது குவளையின் அடியில் மோதிரம் ஒன்று இருப்பதை, ஏழாவது காகம் பார்த்தது. அது தங்களுடைய தாய், தந்தையரின் மோதிரம் என்பதை அறிந்தது.
"ஆ, நம் தங்கை இங்கே வந்திருக்க வேண்டும். இனி, நாம் விடுதலை ஆகி விடுவோம்,'' என்றது.
அப்போது ஒளிந்திருந்த தங்கை அதைக் கேட்டு வேகமாக ஓடிவந்தாள். அந்தக் கணத்திலேயே, அத்தனைக் காகங்களும் தங்களுடைய சொந்த உருவத்தைப் பெற்றன.
ஏழு அண்ணன்களும் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக் கொண்டனர். அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். தங்கையை உடன் அழைத்துக்கொண்டு, வீடு திரும்பினர். அன்றுமுதல் அவர்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.