Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

கோடை கால அழகு பராமரிப்பு


வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரம் 3 முறை கூந்தலை தரமான ஷாம்பு கொண்டு அலச வேண்டும். வியர்வை சேர்ந்தால் மண்டையின்  துவாரங்கள் அடைபட்டு முடி உதிரும். கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். வெயிலில் வெளியே செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்க  வேண்டாம். எண்ணெய் வைத்தால் தான் முடி படியும் என்பதால் சிலர் எண்ணெய் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். எண்ணெய் வைத்தால்  சிறிது நேரத்தில் தலையை அலசி விட வேண்டும். அல்லது முதல் நாள் இரவு வைத்து காலையில் தலையை அலச வேண்டும். 

வெளியே செல்லும் போது முடிபறக்காமலிருக்க ஸ்டைலிங்க் பொருட்களையோ, கண்டிஷனரையோ உபயோகிக்கலாம். எண்ணெயுடன் வெளியே  செல்லும் போது அழுக்கும், தூசியும் அதிகம் சேர்ந்து பொடுகு முடி உதிர்வெல்லாம் வரலாம். சிறிதளவு தயிரில் முதல் நாள் இரவே கொஞ்சம்  வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறி அலசலாம். இது உச்சி முதல்  பாதம் வரை உடலைக் குளுமையாக்குவதுடன் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில  துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். 

ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால்  உடலுக்கும் குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும். தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை  தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும்  போது தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக  வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்

கூந்தலுக்கு...

சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும். எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். ஆரம்ப நிலை  பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும்  குளிர்ச்சி, கூந்தலும் மிருதுவாகும். தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும்.  கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது  தலைக்கு தொப்பியோ, துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும்.  போனி டெயிலே, உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.