Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

'நாய் வண்டி வரட்டும் உன்ன‌ புடிச்சு கொடுக்குறேன்' ட்விட்டரில் இலங்கை ரசிகரை கலாய்த்த‌ அஸ்வின்!


உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும்  இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடக்கவுள்ள நிலையில் இலங்கை ரசிகர் ஒருவர் இந்திய வீரர் அஸ்வினை ட்விட்டரில் விமர்சித்துள்ளார். இதற்கு அஸ்வினும் பதிலுக்கு கலாய்க்க ட்விட்டரில் வாக்குவாதம் முற்றியது. 

அந்த ரசிகர் அஸ்வினை பார்த்து ''நாளை கெயில் புயல் வீசும் இந்தியா தோற்கும் என கூற'' பதிலுக்கு அஸ்வின் போன முறை நீ தானே கூறினாய் இந்தியா ஆஸியை வென்றால் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொள்வேன் என்று இன்னுமா கிரிக்கெட் பார்க்கிறாய் என கலாய்க்க.

நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால் இந்தியர்களின் முகத்தை தோல்வியில் பார்க்க பிடிக்கும் என கூற...கடுப்பான அஸ்வின் ''நாய் வண்டி வரட்டும் உன்ன‌ புடிச்சு கொடுக்குறேன். நாளைக்கு என்ன நடக்கும்ங்கிற கவல எனக்கு இல்ல'' என ட்விட் செய்துள்ளார்.
அஸ்வின் இதேபோல் பங்களாதேஷ், ஆஸி ஆட்டங்களின் போது ட்விட்டரில் திட்டுபவர்களை கலாய்த்துள்ளார். மேலும் ஹர்பஜனும் இதே போன்று பாகிஸ்தான் ஆட்டத்தின் போது ரசிகர்களோடு வக்குவாதத்தில் ஈடுபட்டார். துணைகேப்டன் விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை திட்டியவர்களை ஷேம் என திட்டினார். கேப்டன் கூல் தோனி உள்ள அணியில் அனைவரும் கோவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்.

பாய்ஸ்! கீப் காம் அண்ட் வின் வேர்ல்டு கப் என்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.