Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தில் 1 கோடி கையாடல் செய்த இயக்குனர்கள் சஸ்பெண்ட்?


போக்குவரத்து கூட்டுறவு சங்கத்தில் ஊழல் செய்த தலைவர் மற்றும் இயக்குனர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இயங்கி வருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்கள் 11 பேர் உள்ளனர். தலைவராக அண்ணா தொழிற்சங்க நிர்வாகி அஸ்லாம் செயல்பட்டு வருகிறார். 
கடந்த ஒரு ஆண்டுக்கு முன், இந்த கூட்டுறவு சங்கத்தில் ஆண்டு இறுதி கணக்கை தணிக்கை செய்த மத்திய கூட்டுறவு வங்கி, சுமார் ரூ.1 கோடி வரை ஊழல் நடந்திருப்பதாக, கூட்டுறவு சங்க பதிவாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. கூட்டுறவு வங்கி அளித்த புகாரின் அடிப்படையில், கூட்டுறவு சங்க பதிவாளர், விசாரணை அலுவலர் ஒருவரை நியமித்தார். 

மத்திய கூட்டுறவு வங்கி புகார் அளித்து சுமார் ஒரு ஆண்டு நிறைவடைந்தும், எந்த நடவடிக்கையும் இல்லை என்று தொமுச, சிஐடியு உள்பட அனனைத்து தொழிற்சங்கங்கள், மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் கூட்டுறவு சங்கத்துக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தின. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட்டுறவு நிர்வாகமே “போக்குவரத்து கழக கூட்டுறவு சங்கத்தில் ஊழல் நடந்திருப்பது உண்மை தான். இதுதொடர்பாக, இயக்குனர்கள் மற்றும் தலைவரிடம் விளக்கம் கேட்டும், அந்த பணத்தை திரும்ப கட்ட கோரியும் உத்தரவு பிறப்பித்துள்ளோம்” என கூறியது. 

ஆனால், விளக்க கடிதம் மட்டும் எழுதிவிட்டு, சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் மீதோ, தலைவர் மீதோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையீடு அதிகம் இருந்ததாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட 11 இயக்குனர்கள், மற்றும் தலைவர் ஆகியோர் விரைவில் சஸ்பெண்ட் செய்யப்பட உள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் என்று சஸ்பெண்ட் ஆர்டர் வருமோ, எப்போது நடவடிக்கை பாயுமோ என்ற பீதியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.