இந்தியாவில் இருந்து பிலிப்பைன்ஸ், ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரிக்கிறது. கனவுகளோடு வெளிநாட்டுக்குச் சென்று படித்துவிட்டுத் திரும்பும் பல ஆயிரக்கணக்கான மருத்துவ மாணவர்கள், இங்கே மருத்துவராக பதிவு செய்ய முடியாமல் பெரும் பணத்தையும், காலத்தையும் தொலைத்து விட்டு எதிர்காலம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனிந்த நிலை? ஒவ்வொரு கல்வியாண்டிலும் தமிழகத் திலிருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டுக் கல்விக்காகச் செல்கிறார்கள். இதில் பெரும்பாலானோர் செல்வது மருத்துவம் படிக்க. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் தவிர்த்து பிற நாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் படித்த நாட்டில் மருத்துவம் பார்க்க முடியாது. இந்தியா திரும்பியாக வேண்டும். ஆனால், இந்தியா திரும்பினாலும் இங்கும் நேரடியாக மருத்துவம் பார்க்க முடியாது.
வெளிநாட்டில் படித்த மருத்துவர்களின் தகுதியை சோதித்தறிவதற்காக இந்திய மருத்துவக் கவுன்சில், தேசிய தேர்வுகள் வாரியத்தின் மூலம் FMGE (Foreign Medical Graduates Examination) என்ற தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவரென்ற அங்கீகாரம் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்லூரியில் சேரும் வரைக்கும் இப்படியொரு தேர்வு இருப்பது பற்றி பெரும்பாலான வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் மாணவர்களிடம் சொல்வதேயில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல. அண்மையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தேசிய தேர்வுகள் வாரியத்திடம் இருந்து ஒரு தன்னார்வலர் பெற்ற தகவல் உறைய வைக்கிறது. 2005, செப்டம்பரில் தேர்வெழுதிய 2,851 மாணவர்களில், 2,192 பேர் (76.8%) தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வுக்குப் பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக இந்த சதவிகிதம் குறைந்துகொண்டே வந்துவிட்டது.
2008, மார்ச்சில் நடந்த தேர்வில் பங்கேற்ற 1,851 மாணவர்களில், 1,087 பேர் (58.7%) தேர்ச்சி பெற்றனர். 2014, ஜூனில் நடந்த தேர்வில் 5,724 பேர் பங்கேற்றாலும், 282 பேர் (4%) மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 2015, ஜூன் மாதம் நடந்த தேர்வில் பங்கேற்ற 5,967 பேரில் வெறும் 603 பேர் (10.4%) மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். டிசம்பர் தேர்வில் 6,407 பேர் பங்கேற்ற போதிலும், 731 பேர் (11.4%) மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். மற்றவர்கள் கதி...? “அதோ கதி தான். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் சிகிச்சை அளிக்க முடியாது. அப்படி சிகிச்சை அளித்தால் போலி மருத்துவர்கள் என்று கைது செய்யப்படுவார்கள்...” என்று வருத்தத்தோடு பேசுகிறார் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம். ‘‘ஒரு காலத்தில் வெளிநாட்டுக் கல்வி ஆலோசகர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தார்கள். நேரடியாக கல்வி நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து மாணவர்களைச் சேர்ப்பார்கள்.
படிப்பு முடியும்வரை மாணவர்களுக்கு இந்த ஆலோசகர்களே பொறுப்பு. இன்று ஏராளமானோர் தொழிலுக்கு வந்து விட்டார்கள். கல்வித்தரம், வேலைவாய்ப்பு, மாணவர்களின் எதிர்காலம் பற்றி யோசிக்காமல் சகல கல்வி நிறுவனங்களும் இங்கே மார்க்கெட்டிங் செய்கிறார்கள். நடைமுறைக்குப் பொருந்தாத வாக்குறுதிகளைக் கொடுத்து மாணவர்களைப் பிடிக்கிறார்கள். இந்த தேர்வு குறித்து மாணவர்களுக்கு சொல்வதேயில்லை. முக்கியமாக, அவர்கள் படித்த கல்வி நிறுவனம் உலக சுகாதார நிறுவனத்திலும், இந்திய மருத்துவக் கவுன்சிலிலும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். சில முகவர்கள் அங்கீகாரம் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்குக் கூட மாணவர்களை அனுப்பி அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்...’’ என வருந்துகிறார் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம். வெளிநாடுகளில் மருத்துவம் படிப்பதே வீண்தானா?
‘‘அப்படிச் சொல்லமுடியாது. ரஷ்யா, சீனா, ஜார்ஜியா, உக்ரைன், பிலிப்பைன்ஸ், செயின்ட் லூசியா, கயானா போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்க இங்கிருந்து நிறைய மாணவர்கள் செல்கிறார்கள். 5 முதல் 6 ஆண்டுகள் படிப்பை முடிக்க ரூ.20 லட்சம் வரை செலவாகும். படிப்பை முடித்தபிறகு, இங்கு நடக்கும் தேர்வில் தேர்ச்சி பெறமுடியும் என்ற நம்பிக்கையும் திறமையும் கொண்ட மாணவர்களுக்கு பிரச்னையில்லை. ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் மருத்துவம் படிக்கலாம். படிப்பு முடிந்ததும் அங்கேயே மருத்துவராகப் பதிவு செய்து சிகிச்சையும் அளிக்கலாம். ஆனால் அவ்வளவு எளிதில் அந்நாட்டு மருத்துவக் கல்வி நிலையங்களில் நுழையமுடியாது. நுழைவுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும். அதைவிட முக்கியம், படிப்பை முடிக்க குறைந்தது ரூ.1 கோடி செலவாகும்...’’ என்கிறார் ஸ்ரீனிவாஸ் சம்பந்தம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.