Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

பிரேமலதா பேச்சுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டனம்


தே.மு.தி.க. தேர்தல் அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் திருச்சி உறையூரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசியபோது, நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கூறிய கருத்துகளை எடுத்துரைத்து பேசினார்.

இதற்கு திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரசிகர் மன்றத்தின் மாவட்ட பொறுப்பாளர் முத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘1996-ம் ஆண்டு தேர்தலில் அப்போது இருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடிகர் ரஜினிகாந்த் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். அதனை பிரேமலதா தற்போது கூறுவது தே.மு.தி.க - மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி ரசிகர்களை திருப்புவது போல உள்ளது. தமிழக அரசியலில் அனைத்து தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நல்ல சுமுகமான நட்புறவை கொண்டுள்ளார். அவர்களது ரசிகர்களும் அதுபோன்று அவரது வழியில் சென்று கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் பிரேமலதா பேசியிருப்பது அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். அவர் பேசிய கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.