வியாசர்பாடியில் பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டிய 4 பேர் கொண்ட மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல ரவுடி
வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனியை சேர்ந்தவர் ஆரோக்கிய தாஸ். இவரது மகன் ராஜகணபதி (வயது 21). பிரபல ரவுடி. பல்வேறு வழிப்பறி, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய இவர் மீது கொடுங்கையூர், வியாசர்பாடி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.
ராஜகணபதி நேற்று முன்தினம் சத்தியமூர்த்தி நகர் சாலையில் உள்ள ஒரு மதுபானக்கடையில் மது அருந்தி கொண்டிருந்தார். அவருக்கு எதிரே 4 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது ராஜகணபதிக்கும், அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அரிவாள் வெட்டு
வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் ராஜகணபதியை வெட்டினார்கள். இதனால் வெட்டுக்காயம் அடைந்த ராஜகணபதி உயிரை காப்பாற்றிக் கொள்ள மதுபானக்கடையில் இருந்து வெளியே சாலைக்கு ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை துரத்திச்சென்று சரமாரியாக வெட்டியது.
இதில் படுகாயம் அடைந்த ராஜகணபதி சாலையில் மயங்கி சரிந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கு இருந்து தப்பிச்சென்றது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ராஜகணபதியை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தனிப்படை விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். ராஜகணபதியை வெட்டிய மர்ம கும்பலை பிடிக்க எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் மன்னர்மன்னன், வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் ராயப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
ராஜகணபதி ரவுடி என்பதால் அந்த கும்பல் அவரை முன்விரோதம் காரணமாக வெட்டினார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.