தற்போது அனுப்பப்படும் ராக்கெட்டுகள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடியவை. இதனை மேம்படுத்தி, மீண்டும் பயன்படுத்தும் வகையிலான ராக்கெட்டை வடிவமைக்கும் பணியை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. வரும் மே மாத மத்தியில் இந்த ராக்கெட் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதுபற்றி விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் கே.சிவன் கூறியதாவது:-
மறுபடியும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் (ஆர்.எல்.வி.) தொழில்நுட்ப பணிகள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அது மேலும் சில பரிசோதனைகளுக்காக அடுத்த வாரம் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து ராக்கெட்டை ஏவும் இறுதிக்கட்ட பணிகளுக்காக ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
சீரான வானிலை நிலவும்போது இந்த ராக்கெட்டை ஏவ விரும்புகிறோம். அநேகமாக மே மாத மத்தியில் ராக்கெட்டை பரிசோதனை செய்ய முடியும் என நம்புகிறோம்.
இந்த ராக்கெட்டை தயாரிக்க சுமார் 95 கோடி ரூபாய் செலவாகும். மேலும், இந்த முயற்சியானது எதிர்காலத்தில் முழு அளவிலான மறுபயன்பாட்டு ராக்கெட் வடிவமைப்பில் முக்கிய பங்காற்றும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோதனைக்கு கொண்டு செல்லப்பட உள்ள ராக்கெட்டானது, 6.5 மீட்டர் நீளம், 1.75 டன் எடை கொண்டது. இது சுமார் 70 கிலோ மீட்டர் உயரம் வரை செலுத்தப்பட்டு, பின்னர் கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இறங்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.எல்.வி. தொழில்நுட்பத்தில் இது முதல் படிதான் என்று கூறிய இயக்குனர் சிவன், உண்மையான மறுபயன்பாட்டு ராக்கெட்டை தரையிறக்கும் அளவுக்கு ஓடுபாதை இங்கு இல்லை என்று குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.