Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

நாங்கள் மிக பயங்கரமான அணி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பயங்காட்டுகிறார்



6–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்–10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் குரூப்1–ல் வெஸ்ட் இண்டீஸ் (6 புள்ளி), இங்கிலாந்து (6 புள்ளி), குரூப்2–ல் நியூசிலாந்து (8 புள்ளி), இந்தியா (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தன. நடப்பு சாம்பியன் இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட எஞ்சிய 6 அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து மூட்டையை கட்டின.

இந்த நிலையில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்து–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வெஸ்ட்இண்டீஸ்  அணி  இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளை வெற்றி கொண்டு தாங்கள் குறித்து தவறாக மதிப்பிட வேண்டாம் என  மீண்டும் வலுவான நிலையில் உள்ளது.

இந்தியாவுடனா போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன டேரன் சமி கூறியதாவது:-

தனது கவனம் முழுவது எதிரணி வீரர்களை விட தனது வீரர்கள் மீதுதான் உள்ளது.வீராட் கோலி ஒரு தனி சிறப்பு மிக்க வீரர் என்பது எல்லோருக்கும் தெரியும்.அவர் ஒரு சிறந்த வீரர் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.அவர் ரன் எடுக்கும் விதம் ஆச்சரியமாக உள்ளது.அவரது திறமையான பேட்டிங்கால் இந்தியா வெற்றிகலை பெற்று வருகிறது.ஆனால் நான் கூறியது போல நாங்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி மீதுதான் கவனம் செலுத்துவோம்.எங்கள் ஓய்வு அறையைபோல் எங்களிடம் மிக பயங்கரமான் வீரர்கள் உள்ளனர்.அதில் தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.நாங்கள்  மிக அழிவு சக்தியாக இருக்க போகிறோம் என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.