Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

டெல்லி கோர்ட்டில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் காயம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்


டெல்லி துவர்கா கோர்ட்டில் நேற்று நடந்த வழக்கு ஒன்றின் குற்றவாளியான அங்கித் தாகர் என்பவர், விசாரணைக்கு ஆஜராவதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்தார். அங்கே அவர் தன் மீது புகார் கொடுத்தவர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சிறிது நேரத்துக்குப்பின் ஒரு மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த மர்மநபர்கள் 2 பேர், அங்கே ஜூஸ் கடையில் நின்றிருந்த அங்கித் தாகர் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் குண்டுபாய்ந்து காயமடைந்தார். மேலும் கடை ஊழியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. பின்னர் மர்ம நபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவத்தால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அங்கு வந்து காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தினர்.

அப்போது, மற்றொரு வழக்கில் சாட்சி அளிப்பதற்காக வந்திருந்த ஒருவரை கொலை செய்வதற்காக அந்த மர்ம நபர்கள் அங்கு வந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.