Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

70 வீடுகளில் கைவரிசை காட்டிய பீரோ புல்லிங் கொள்ளையன் கூட்டாளியும் சிறையிலடைப்பு


சென்னையை கலக்கிய பிரபல பீரோ புல்லிங் கொள்ளையன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அவரது கூட்டாளியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை கே.கே நகரில் உள்ள காமராஜர் நகரை சேர்ந்தவர் பேகம் (38). இவர், ேநற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டு இருந்தபோது, கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையன், பீரோவில் இருந்த தங்க வளையல், செயின், கம்மல் உள்பட 140 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றான். காலையில் கண் விழித்து பார்த்த பேகம் வீட்டில் நகை கொள்ளையடிக்கப் பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணையில் இறங்கினர். 

அதில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி என்.ஆர் பேட்டையை சேர்ந்த நாகமணி (40) என்பவர், பேகம் வீட்டில் கொள்ளையடித்தது தெரிந்தது. அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். கைதான நாகமணி மீது மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை, பள்ளிக்கரணை, பழவந்தாங்கல் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 70க்கும் மேற்பட்ட பீரோ புல்லிங் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 3 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்ரவரி 16ம் தேதி சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். அதைத் தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை என சென்னையில் 70க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளையடித்துள்ளார். 

பின்னர், திருடிய பொருட்களை தனது கூட்டாளி விழுப்புரம்  வானூர் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஞானமுத்து (31) உதவியுடன் திண்டிவனம், மதுரை, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் விற்று, அதன் மூலம் கிடைத்த  பணத்தை வைத்து கோவா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஞானமுத்துவை போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான 2 பேரிடம் இருந்து 37  சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இதைத்  தொடர்ந்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில்  புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.