ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை (லோயர் பெர்த்) ஒதுக்கீட்டை அதிகரித்து பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவிப்பு வெளியிட்டார்.
ஒதுக்கீடு முறை
ரெயில்களில் மூத்த குடிமக்களுக்கு கீழ் படுக்கை ஒதுக்கீடு முறை முதன்முதலாக 2007–ம் ஆண்டு அமலுக்கு வந்தது. அப்போது இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் தலா 2 கீழ் படுக்கைகள் மூத்த குடிமக்களுக்காக ஒதுக்கப்பட்டது.
இது கடந்த ஆண்டு 4 ஆக உயர்த்தப்பட்டது. இதன்படி இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் தலா 4 கீழ் படுக்கைகள் மூத்த குடிமக்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தது.
மூத்த குடிமக்கள் கோரிக்கை ஏற்பு
இந்த நிலையில் கீழ் படுக்கை ஒதுக்கீட்டை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று மூத்த குடிமக்கள் ரெயில்வே துறையிடம் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்றுத்தான் கீழ் படுக்கை ஒதுக்கீட்டை அதிகரித்து ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி இரண்டாம் வகுப்பு, ஏ.சி. 3 அடுக்கு, ஏ.சி. 2 அடுக்கு பெட்டிகளில் மூத்த குடிமக்களுக்கு ஒவ்வொரு பெட்டியில் தலா 6 கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்மூலம் ஒவ்வொரு ரெயிலிலும் மூத்த குடிமக்களுக்கு சுமார் 80 முதல் 90 கீழ் படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
1–ந் தேதி அமல்
இது ஏப்ரல் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது.
அதே நேரத்தில் ராஜ்தானி, துரந்தோ, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில் ஒவ்வொரு பெட்டியிலும் மூத்த குடிமக்களுக்கு தலா 4 கீழ் படுக்கைகள் ஒதுக்கப்படும்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.