Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 28, 2016

பெங்களூரு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைது


பெங்களூரு மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறி மாணவரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ படிப்புக்கு...

சென்னையை சேர்ந்த மாணவர் ரூபன் ஜெபர்சன் ஜான் (வயது 20) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனுவை அளித்திருந்தார். 

அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் வாங்கி தருவதாக கூறி விருதுநகரை சேர்ந்த எம்.சி. செல்வகுமார் என்பவர் ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டார். பணத்தை திருப்பி கேட்டபோது, தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்’ என்று கூறி இருந்தார்.

புகாரின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்புபிரிவு போலீசாருக்கு கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். 

விருதுநகரில் கைது

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். விசாரணையில், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களை கவரும் விதமாக விளம்பரங்களை வெளியிட்டு அதன்மூலம் செல்வகுமார் மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து தலைமறைவாக இருந்து வந்த செல்வகுமாரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் விருதுநகர் பஸ்நிலையம் அருகே செல்வகுமார் இருப்பதாக நேற்றுமுன்தினம் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் போலீசார் விருதுநகருக்கு சென்று செல்வகுமாரை கைது செய்தனர். 

சிறையில் அடைப்பு

செல்வகுமார் எம்.காம்., பி.எச்டி பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மாணவர் ரூபன் ஜெபர்சன் ஜானை ஏமாற்றியது போன்று மேலும் பல மாணவர்களிடம் லட்சக்கணக்கில் செல்வகுமார் மோசடி செய்துள்ளார்.

கைது செய்யப்பட்ட செல்வகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.