மக்களின் ஆரோக்கியமே தேசத்தின் வலிமை! 1900 முதல் 2014 வரை உள்ள காலகட்டத்தில் நமது நாட்டு மக்களின் உயிர் இழப்பினை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். வயோதிகம் அடைந்து, சுகமாக இயற்கை மரணம் அடைந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சாதாரண காய்ச்சலில் தொடங்கி, டெங்கு, நிமோனியா, சயரோகம், நீரிழிவு, நெஞ்சு அடைப்பு, புற்றுநோய் என நூற்றுக்கணக்கான புதிய நோய்களால் இறந்து போனவர்களே
அதிகம்.
காரணம்?
வழக்கமான நமது உணவுப் பழக்கங்களை மறந்தது, மாசு படிந்த வாயு மண்டலம், இருந்த இடத்தை விட்டு நகராத சோம்பேறித்தனமான வாழ்க்கை, உணவுப் பொருட்களில் உள்ள விபரீதமான கலப்படம், உடலில் வெயில் அதாவது, சூரிய ஒளி ஒரு துளிகூட படக்கூடாது என்ற அல்ப எண்ணம், வீடு, கடை, தொழிற்சாலை கழிவுகளை சாலைகளில் எறிவது, சுத்தமான குளம், ஏரி, ஆறுகளில் கலந்து விடுவது என சுகாதாரமின்மையை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும்தான் நமது எமன்!
இவற்றோடு, புகைப் பிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பின்மை, நல்ல தூக்கம் இல்லாமை, அதிக மாத்திரைகள் உபயோகம், உணவில் உள்ள அளவுக்கு அதிகமான கொழுப்பு என மென்மேலும் சொல்லிக்கொண்டே போகலாம். சரி... இதுபோல குறை சொல்லிக்கொண்டே இருப்பதை விட்டு விட்டு, இதற்கு ஒரு விடிவுகாலம் உண்டாக என்னதான் செய்ய வேண்டும்? ‘ஒளிமயமான 2015 - நாட்டின் ஆரோக்கியம்’ என்ற கொள்கையை முன் வைத்து, அரசாங்கம்தான் எல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணாமல், நாம் ஒவ்வொருவரும் நமது உடல்நலத்தை இன்று முதல் பேணிக்காக்கத் தொடங்க வேண்டும். அதை விடாமல் தொடரும்போது சிறந்த, ஆரோக்கியமான நாட்டு மக்களை உடைய வலிமையான இந்தியாவை நம்மால் உண்டாக்க முடியும். இக்கொள்கையை வழிநடத்தி, பலனடைய ஒரே வழி - உடற்பயிற்சியே!
உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில் அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியுமா?’ என்ற விதண்டாவாதத்தில் சிலர் ஈடுபடுவார்கள். உங்கள் குடும்ப பரம்பரையின் (Heredity) காரணமாகவும் உங்களின் ஆயுள் அனுமானிக்கப்படுகிறது என்றும் தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் - தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்... நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.
முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம். மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கி யம் அடைவது மட்டுமல்ல... எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.
உடற்பயிற்சி என்றால் என்னவெல்லாம் செய்யலாம்? இதோ... 15 ஐடியாக்கள்!
தோட்டத்தில் செடிகளை பராமரிப்பது, தண்ணீர் ஊற்றுவது என 30 முதல் 45 நிமிடங்கள்.
வீட்டில் கூரை, ஜன்னல், கதவுகளை துடைப்பது, கழுவுவது என 45 முதல் 60 நிமிடங்கள்.
காரை கழுவி, துடைத்து, மெருகேற்றுவது 45 முதல் 60 நிமிடங்கள்.
ஐந்து மைல் தூரம் சைக்கிள் ஓட்டுவது - 45 நிமிடங்கள்.
நண்பர்களோடு கைப்பந்து விளையாடுவது - 45 நிமிடங்கள்.
குழந்தைகளோடு கால்பந்து விளையாடுவது - 30 முதல் 45 நிமிடங்கள்.
கூடைப்பந்து மைதானத்தில் தொடர்ச்சியாக கூடையில் பந்தை போடுவது - 30 நிமிடங்கள்.
பிடித்த பாடல்களுக்கு நடனம், மேலைநாட்டு நடனம், பரதம், குச்சுப்பிடி, மோகினியாட்டம் என ஏதேனும் நடன வகைகள் - 30 நிமிடங்கள்.
3 கிலோ மீட்டர் தூரத்தை 30 நிமிடங்களில் நடப்பது. 20 நிமிடங்கள் நீந்துதல்.
வீட்டைச் சுற்றி விழுந்து கிடக்கும் இலை, தழைகளை கூட்டி சுத்தப்படுத்துவது - 30 நிமிடங்கள்.
குடும்பத்தினரோடு இறகுப்பந்து விளையாடுவது - 45 நிமிடங்கள்.
மாடிப்படிகளில் ஏறி இறங்குவது - 20 நிமிடங்கள். ஸ்கிப்பிங் - 15 நிமிடங்கள்.
மெது ஓட்டம் - 3 கிலோ மீட்டர் தூரம் - 20 முதல் 30 நிமிடங்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.