வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு கல்வி பயில வரும் மாணவர்களின் வருகை குறித்து 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசுக்கு தகவல் அளிக்கும் படி பல்கலை கழகங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளிநாட்டில் இருந்து கல்வி கற்க இந்தியா வரும் மாணவர்களின் முழு விவரங்களையும் மத்திய அரசுக்கு தெரிவிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.
அதாவது அவர்களின் பெயர், அவர்களின் நாடு, இந்தியா வந்ததன் நோக்கம், அவர்கள் எத்தனை நாட்கள் தங்க உள்ளனர், யாரை சந்திக்கின்றனர் என்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஹோட்டல், விடுதிகள், மருத்துவமனைகளுக்கும் வரும் வெளிநாட்டினர் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.