Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 26, 2016

2022 ஆம் ஆண்டில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு விஞ்ஞானிகள் கருத்து


நிலாவில் மனிதர்களை வசிக்க வைப்பதற்கான முயற்சி பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஒரு வேளை இந்த முயற்சி சாத்தியப்பட்டால் அது மனிதக்குலத்தின் உச்சக்கட்ட சாதனையான விளங்கும். இதற்காக தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அடுத்த ஐந்து அல்லது ஏழு ஆண்டுகளில் நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக நாசாவின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 பேர்கள் வரை தங்கக்கூடிய வகையில் நிலாவில் வரும் 2022 ஆண்டுக்குள் தளம் அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 10 பில்லியன் டாலர்கள்(இந்திய மதிப்பில்ரூ.66915 கோடி) வரை செலவு பிடிக்கும் என்று கூறப்படுகிறது.


ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தளம் அமைப்பது தொடர்பான தங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளது. எனவே அதற்கு முன்பாகவே நிலாவில் மனிதர்கள் வசிப்பதற்காக தளத்தை அமைக்கும் சவால் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்துக்கு நிலாவில் தளம் அமைப்பது தான் அத்தியாவசிய நடவடிக்கையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.