அமெரிக்காவில் வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என அந்த நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
விமானப் போக்குவரத்துத் துறையில் ஆளில்லா விமானங்களுக்கான தேவை, அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் 25 லட்சம் ஆளில்லா விமானங்கள் புழக்கத்தில் இருக்கும்.
2020-ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 70 லட்சமாக உயரும்.
தற்போதைய ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கையைப் போல் இது மும்மடங்காகும்.
விமானப் போக்குவரத்துத் துறையில் இதுவரை இல்லாத இந்த வளர்ச்சிப் போக்கு, கடந்த ஆண்டிலிருந்தே தொடங்கிவிட்டது.
அமெரிக்க அரசின் கொள்கைகளுக்கேற்ப விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு ஆணையம் விதிக்கும் பாதுகாப்பு விதிமுறைகளால் இந்த வளர்ச்சி வேகம் பாதிக்கப்படலாம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.