Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 24, 2016

136 ஆண்டுகளில் கடந்த பிப்ரவரி மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானது நாசா தகவல்


அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனம் கட்டார்டு இன்ஸ்டியூட் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும்போது கடந்த மாதம் தான் அதிகளவு வெப்பம் பதிவானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடுதலாக பதிவானதாகவும், அது பிப்ரவரி மாதத்தில் 1.35 டிகிரி செல்சியசாக அதிகரித்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவானது கடந்த 136 ஆண்டுகளை ஒப்பிடும் போது, பிப்ரவரி மாதத்தில் பதிவான அதிகளவு வெப்பநிலை என நாசா தெரிவித்துள்ளது.

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும், எல் நினோ காரணமாக இந்த பருவநிலை மாறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

1880ம் ஆண்டு முதல் உலக அளவில் வெப்ப நிலை மாற்றம், மழை அளவு உள்ளிட்டவை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.