"சந்தை வியாபாரம் எப்படி?'' என்றும் விசாரித்தாள்.
"ஏதோ இருந்தது. பிரமாத மான லாபம் என்று சொல்வதற்கில்லை. சந்தை யில் மாட்டை வாங்குவார் யாருமில்லை. ஆகவே, வழியில் ஒருவனுடைய குதிரைக்கு அதை மாற்றிக் கொண்டேன்,'' என்றான் டேவிட்.
"குதிரைக்கா? பேஷ், பேஷ். நல்ல பேரம் தான். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. வசதியோடு இருக்கும் நாம், மற்றவர்களைப் போல சர்ச்சுக்கு இனிக் குதிரை பூட்டிய கோச் வண்டியில் போகலாம். நானே உங்களிடம் ஒரு குதிரை வாங்கும்படி சொல்ல நினைத் தேன். குதிரை வைத்துக்கொள்ள நமக்குத் தகுதி இல்லையா என்ன?'' என்று பாராட்டி விட்டு தன் குழந்தையைப் பார்த்து, "டேய் பையா வாசலில் போய்க் குதிரையைப் பிடித்துக் கட்டு போ!'' என்றாள்.
அதற்குள் டேவிட், "இரு, இரு... குதிரையை நான் வீட்டுக்குக் கொண்டு வரவில்லை. கொஞ்ச தூரம் அதை ஓட்டிக் கொண்டு வந்தேன். எதிரில் கொழுத்த பன்றி யுடன் ஒருவன் வந்தான். குதிரையைக் கொடுத்து விட்டுப் பன்றியை வாங்கினேன்,'' என்றான்.
"அப்படியா! நானாக இருந்தால் கூட இதைத்தான் செய்திருப்பேன். ரொம்ப, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது! நம்மைக் காண வரும் விருந்தாளிகளுக்கு பேகன் பணியாரம் செய்து வைக்கலாம். குதிரை இருந்து என்ன பயன்? சர்ச்சுக்கு நடந்து வரக்கூடாதா? "இவர்களுக்கு வந்த வாழ்வைப் பாரு!' என்று நம்மைப் பார்த்துப் பிறர் பேசுவர். குழந்தாய்... வெளியே ஓடிப் போய் பன்றியைத் தொழுவத்தில் கொண்டு போய் கட்டு,'' என்றாள்.
"இரு, இரு நான் பன்றியையும் கொண்டு வரவில்லை. பன்றியைக் கொடுத்து ஒரு வெள்ளாட்டை வாங்கினேன்!'' என்றான்.
"பேஷ், பேஷ்!'' என்று குதூகலப்பட்டாள் மனைவி.
"எப்படி உங்களுக்கு இவ்வளவு சாமர்த்தியம் வந்தது. இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறேன். பன்றியினால் என்ன பிரயோசனம். அதோ அந்த வீட்டிலிருக்கிறார்களே, அவர்கள் வயிராறத் தின்று வாழ்கிறார்கள்' என்று பெருமைப்படுவதுதான் மிஞ்சும். நல்லவேளை வெள்ளாடு வந்தது. ஆட்டில் பாலும், சீசும் நிறையக் கிடைக்கும். ஆட்டையும் வளர்க்கலாம். போடா போய் ஆட்டைப் பிடித்து...வா'' என்றாள்.
"இரு, இரு ஆட்டையும் நான் வீட்டுக்குக் கொண்டு வரவில்லை. வெள்ளாட்டைக் கொடுத்துவிட்டு செம்மறியாடு ஒன்றை வாங்கினேன்!''
"நிஜமாகவா? ஒவ்வொரு காரியமும் நான் செய்வதை போலவே செய்கிறீர்களே. வெள்ளாட்டினால் என்ன பயன்? அதை மேய விடுவ திலும் மலையிலிருந்து அதை இழுத்துக் கொண்டு வந்து கட்டு வதிலும் பொழு தெல்லாம் போய் விடும். செம்மறி யாடானால் கம்பளிக்குக் கம்பளி, புதிய இறைச்சிக்கு இறைச்சி டேய் பையா!''
"இரு, இரு, அவசரப்படாதே, செம்மறி யாட்டை கொடுத்துவிட்டு ஒரு கொழுத்த வாத்தை வாங்கினேன்!''
"நன்றி, நன்றி! கணவரே உங்களுக்கு என் உளங்கனிந்த நன்றி,'' என்று கைக்கூப்பி கூத்தாடினாள் டேவிட்டின் மனைவி.
"செம்மறியாட்டைக் கொண்டு நான் என்ன செய்ய? என்னிடமோ கம்பளியை நூற்க இயந்திரமில்லை. ஆடையாக நெய்யத் தறி இல்லை. அப்படியே நெய்தாலும் யார் அதை வெட்டி ஒட்டித் தைப்பது? தொல்லை பிடித்த வேலை. இத்தனை காலம் வாங்கியது போல உடைகளாகவே வாங்கிவிட்டால் போகிறது. வாத்தைப் பொரியல் செய்து சாப்பிடலாம். ரொம்ப ருசியாக இருக்குமே. வெகு நாளாக வாத்துப் பொரியல் சாப்பிட வேண்டுமென்று எனக்கு ஆசை. தவிர என்னுடைய சின்னத் தலையணையில் வாத்து இறகுகளை அடைத்து வைப்பேன்.
"டேய் ஓடு... போ...'' என்றாள்.
உடனே டேவிட் இடைமறித்து, தான் வாத்தைக் கொடுத்துச் சேவலை மாற்றியதைச் சொன்னான்.
"ஆசைக் கணவனே! நான் நினைப்பது போலவே எப்படிச் செய்ய முடிகிறது? சேவல்! நினைத்துப் பாருங்கள். சாவி கொடுக்காத, ரிப்பேராகாத ஒரு கடிகார மல்லவா? ஒவ்வொரு நாளும் அதிகாலை யில் நம்மை எழுப்பிவிட்டுச் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுமே. வாத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய. வாத்துப் பொரியல் ருசிதான். தலையணைக்குப் பஞ்சு அடைத்துக் கொண்டால் போகிறது. ஓடு ஓடு. பயலே அப்பா வாசலில் சேவலை விட்டிருக் கிறாராம்,'' என்று குதூகலப்பட்டாள்.
"பார்க்கப் போனால் நான் சேவலையும் கூடக் கொண்டு வரவில்லை. நாளெல்லாம் நடந்த பசியும், களைப்பும் என்னை வாட்டி யெடுத்தன. ஆகவே, வேறு வழியின்றி சேவலை விற்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஒரு கடையில் அதை விற்று வயிறாரச் சாப்பிட்டேன், இல்லாவிட்டால் பட்டினியால் செத்திருப்பேன்,'' என்றான் டேவிட்.
"நல்ல காரியம் செய்தீர்கள். கடவுள் இப்படிச் செய்யத் தூண்டினாரே உங்களை அதற்காக அவரைப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் எது செய்தாலும் என் உள்ளம் திருப்தி படும்படி செய்கிறீர்களே! அது ஒன்றே போதும். சேவல் நமக்கெதற்கு? நாம் என்ன யாருக்காவது அடிமையா, அதிகாலையிலேயே எழுந்திருந்து அவதிப் பட? நிம்மதியாகப் படுத்துத் தூங்கி விட்டு விடிந்த பிறகு நம் இஷ்டப்படி எழுந்திருப்போமே... நீங்கள் நல்லபடியாக பசியால் வாடாமல் வந்து சேர்ந்தீர்களே, அதுவே போதும்.
"நீங்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு நன்மை இருக்கும். சாப்பிடாமல் மயங்கி விழுந்தால் என்ன ஆகி இருக்கும். எனக்குச் சேவலும் வேண்டாம், வாத்தும் வேண்டாம்,'' என்றாள்.
உடனே டேவிட் வாசல் பக்கம் திரும்பினான். இத்தனை நேரமும் இவர்கள் சம்பாஷணை யால் திகைத்துப் போய் நின்று கொண்டிருந்த அண்டை வீட்டுக்காரன் ஒப்பந்தபடி தொங்கிய தலையுடன், டேவிட்டின் கையில் நூறு டாலர்களை எண்ணி வைத்து விட்டுப் போனான்.
"மாட்டின் விலை நூறு டாலர்!'' என்று சொல்லி அதை அவள் கையில் கொடுத்தான் டேவிட்.
கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையாக இருந்தாலே போதும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.