ஏதோ பலான கதை ஓப்பனிங் மாதிரி இருக்கே என பயப்பட வேண்டாம். இது கொஞ்சம் டீசன்ட். பார்க், பீச் என ஊர் சுற்றவும்... சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும்... பார்ட்டியில் கைகோர்த்து வலம் வரவும் இந்த பாய் ஃபிரெண்டுகள் கம்பெனி கொடுப்பார்களே தவிர, படுக்கைக்கோ முத்தத்துக்கோ ஸ்ட்ரிக்ட்டாக நோ!
இது என்னப்பா அமெரிக்காவில் கூட இல்லாத கல்ச்சர்? எங்கே நடக்குது? எனத் தேடினால், ஜப்பானும் சீனாவும் கை கட்டி நிற்கின்றன. அங்கே கிட்டத்தட்ட கால் டாக்ஸி சர்வீஸ் போல பெரிய பெரிய நிறுவனங்கள் பாய் ஃபிரெண்ட் சர்வீஸ் நடத்துகின்றன.
ஃப்ரெஷ், ரெகுலர், ஸ்பெஷல் என இங்கு கிடைக்கும் பாய் ஃபிரெண்டுகளில் மூன்று தரம் உண்டு. அனுபவம் இல்லாத ஃப்ரெஷ் பையன் என்றால் ஒரு மணி நேரத்துக்கு நம்மூர் மதிப்பில் சுமார் 2500 ரூபாய் வாடகை. ரெகுலருக்கு 3100, ஸ்பெஷலுக்கு 3600 என பீட்சா விலை மாதிரி நிர்ணயித்திருக்கிறார்கள்.
ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட நகரங்களில் மனிதர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். ஒரு காதல் இயற்கையாக உருவாக வேண்டுமென்றால், சின்னச் சின்ன அரட்டை, சண்டை, சமாதானம் எனப் பல ஸ்வீட் நத்திங்குகள் தேவை.
இதற்கு நேரமில்லாததால் அங்கே திருமண உறவுகளே அற்று சிங்கிள் அங்கிள் ஆன்ட்டிகள் அதிகமாகிவிட்டார்களாம். அப்படிப்பட்டவர்களுக்குத்தான் சென்டிமென்ட்ஸ் ஏதும் இல்லாத இம்மாதிரி இன்ஸ்டன்ட் உறவுகள் இனிக்கின்றன.
சீனாவைப் பொறுத்தவரை அங்கு தங்கள் கரியருக்காக கல்யாணத்தைத் தள்ளிப் போடும் பெண்களும் அதிகரித்து வருகிறார்கள். ஆனால் அந்த நாட்டு பண்பாட்டின்படி, 27 வயதாகியும் காதலிக்கப்படாத / கல்யாணம் ஆகாத பெண் என்றால் அவளை நிராகரிக்கப்பட்டவள் லிஸ்ட்டில் சேர்த்துவிடுவார்களாம். அந்த அவமானத்தில் இருந்து தப்பிக்க இந்த வாடகைக் காதலர்கள் உதவுகிறார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் இருந்தாலும் வாடகைக் காதலிகளை விட வாடகைக் காதலர்கள் மலிவுதான். ஏன், சீனாவைப் பொறுத்தவரை ஒரு வாடகைக் காரை விட காதலன் சீப்தானாம்! நம்ம கிழக்கு எங்கேயுமே விடியாது போலிருக்கே பாஸ்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.