மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ அருகில் குவாடெமலா என்ற பகுதியில் 16 வயதுடைய இளம்பெண்ணை மர்ம கும்பல் ஒன்று நடுரோட்டில் அடித்து உதைத்து தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். மக்கள் நடமாடும் இந்த பகுதியில் மர்ம கும்பல் பெண்ணை தீவைத்து எரித்து விட்டு சென்றது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண்ணை தீயில் எரித்து கொன்ற வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் அந்த பெண் வெளியே இழுத்து வரப்பட்டு முகம் முழுவதும் ரத்தகாயங்களுடன் காணப்படுகிறது. ஒருவர் தலைமுடியை இழுத்து அந்த பெண்ணை அடிக்கிறார். மற்றொருவர் அந்த பெண் மீது உடல் முழுவதும் பெட்ரோல் ஊற்றுகிறார். தீ வைத்து எரிப்பதை ஒருவர் படம்பிடிக்கிறார் வலியால் அலறி துடித்த பெண் தீயில் கருகி பரிதாபமாக பலியாகிறார். இந்த வீடியோவை பார்த்து சமூக ஆர்வலர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மத்திய அமெரிக்காவின் மெக்சிகோ அருகில் ரியோ பிரவா என்ற நகரில் 16 வயதுடைய அந்த இளம்பெண் வசித்து வருகிறார்.இவர் அதே பகுதியில் வசித்து வரும் டாக்சிடிரைவரை (வயது 61) கொன்றதாக கூறப்படுகிறது.
இந்த காட்சியை கண்டு பொதுமக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எரித்துகொல்லபட்ட பெண் யார் என்று இதுவரை கண்டறியப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருவதாக தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.