ஜெர்மனிய பிராங்பூட் நகரில் இடம்பெற்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் பத்திரிகையாளர் மாநாட்டின் போது விளக்கமளித்துக் கொண்டிருந்த அந்த வங்கியின் தலைவரை நோக்கி பாய்ந்து சென்ற பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், அவர் மீது காகிதத் துண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான மரியோ திராகியின் மீதே பார்வையாளர் கூட்டத்திலிருந்து பாய்ந்து வந்த குறிப்பிட்ட பெண் காகித துண்டுகளை வீசியுள்ளார். மரியோ திராகியின் மெய்ப்பாதுகாவலர் என்ன நடைபெறுகிறது என்பதை கிரகித்து செயற்படுவதற்கு முன்னரே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காகித துண்டுகள் உடல் முழுவதும் தூவப்பட்ட நிலையில் ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் திக்பிரமித்து அமர்ந்திருக்க, ஜொஸப்பின் விட் (21 வயது) என்ற மேற்படி பெண் ஆர்ப்பாட்டக்காரரை மடக்கிப் பிடித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். இதன் போது ஜொஸப்பின் வெற்றியை குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்தான 'வி' அடையாளத்தை தனது கைவிரல்களால் காண்பித்தவாறு களிப்புடன் சிரித்துள்ளார்.
ஜொஸப்பின் பெண்ணியவாத அமைப்பான பெமெனைச் சேர்ந்தவராவார். அந்த அமைப்பு பொருளாதாரம், கலாசாரம், உயர் தொழில் என்பவற்றில் ஆணாதிக்கம் நிலவுவதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
[gallery ids="54529,54528,54524,54523,54522,54527,54526"]
[youtube http://www.youtube.com/watch?v=5j66fb0qSao]

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.