July 11, 2017
கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் முழுஅடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு: நியமன MLA-க்கள் விவகாரம் !
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் நடைபெற்று வரும் முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புதுவை மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு தெரியாமல் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, பாரதிய ஜனதா நிர்வாகிகளை MLA-க்களாக நியமனம் செய்ததை கண்டித்து இந்த முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்களாட்சிக்கு எதிராக செயல்படும் கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கட்சிகள் கோரியுள்ளன.
காரைக்கால் மாவட்டத்திலுள்ள காரைக்கால், திருநள்ளாறு, கோட்டுச்சேரி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பெரும்பாலான இடங்களில் இயங்கவில்லை. தனியார் ஆட்டோக்களும், வாகனங்களும் இயங்கவில்லை.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் காரணமாக மாவட்டம் முழுவதும் மீன் விற்பனை நிறுத்தம் காரணமாக மீன் ஏற்றுமதி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே காரணத்திற்காக கடந்த 8-ம் தேதி புதுச்சேரி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. அப்போது காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்றதால் முழுஅடைப்பு இங்கு நடைபெறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிரண்பேடியை கண்டித்து காரைக்காலில் முழுஅடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு: நியமன MLA-க்கள் விவகாரம் !
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.