July 9, 2017
தெருக்களில் மூட்டைகளில் கொண்டு வந்து விற்கப்படும் பொருட்கள்: GST-ஐ தவிர்க்க வியாபாரிகள் யுக்தி !
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் தெருக்களில் விற்கப்படும் மளிகை பொருட்களை வாங்கும் ஆர்வம் மக்களிடையே அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் குடியிருப்புகளில் உள்ளோர், அவப்போது அருகாமையில் தெருமுனைகளில் மூட்டைகளில் விற்கப்படும் மளிகை பொருட்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர், இதன் மூலம் சூப்பர் மார்க்கெட்டுகளில் GST வரியுடன் அதிக விலைக்கு பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்று தெரு முனைகளில் மளிகை பொருட்களை கொண்டு வந்து எந்த வரியும் இல்லாமல் விற்கப்படும் பொருட்களின் தரத்தை அறிந்தே வாடிக்கையாளர்கள் வாங்குகின்றனர். மேலும் தரத்தை ஒப்பிடும் போதும் பிராண்டட் மளிகை பொருட்கள் அளவிற்கு தரம் இருப்பதாக பெண்கள் கூறுகின்றனர்.
கிலோ கணக்கில் அல்லாமல் பண்டைய முறைப்படி படிக்கணக்கில் மளிகை பொருட்கள் அளந்து தரப்படுகிறது. எந்த வரியையும் செலுத்தாமல் பொருட்களை வாங்கிச் செல்ல வசதியாக உள்ளதால் பெண்கள் மற்றும் வாடிக்கயைாளர்களின் அமோக ஆதரவு இங்கு காணப்படுவது குறிப்பிட்டத்தக்கது.
தெருக்களில் மூட்டைகளில் கொண்டு வந்து விற்கப்படும் பொருட்கள்: GST-ஐ தவிர்க்க வியாபாரிகள் யுக்தி !
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 09, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.