Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2017

டெல்லி பொருளாதார மாநாட்டில் அருண்ஜேட்லி குமுறல்: கருப்பு பணத்தை ஒழிக்க முடியவில்லை !


தேர்தலில் கருப்பு பணம் புழங்குவதை தடுப்பது பெரும் சவாலாக இருக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ரொக்க பரிவர்த்தனை பெருமளவில் குறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பணமற்ற பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன என்ற அவர், கருப்பு பண புழக்கம் குறைந்துள்ளது என்றும் கூறினார்.

அதே சமயம் தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளிடம் புழங்கும் கருப்பு பணத்தை கட்டுப்படுத்துவதில் அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். கருப்பு பண புழக்கம் பற்றி குறைசொல்வதை விட்டு அதை தடுப்பதற்கான யோசனைகளை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என்று அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

இது குறித்து அரசியல் கட்சிகளுக்கு தாம் ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளதாக கூறிய அவர் இதற்கு எந்த கட்சியிடம் இருந்தும் பதில் வரவில்லை என்று கூறினார். கருப்பு பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கும் இப்போதைய நிலைமையே நீடிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் விரும்புகிறதா என்று அவர் வினவினார். டெல்லி பொருளாதார மாநாட்டில் சிங்கப்பூர் துணை பிரதமர் தர்மர் சண்முகமும் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.