Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 27, 2017

பெங்களுரு: செல்பி எடுத்த போது யானை தாக்கி வாலிபர் மரணம் !


அத்துமீறி பன்னர்கட்டா உயிரியல் பூங்காவிற்குள் சென்று செல்பி எடுத்த வாலிபர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இது பற்றி போலீசார் கூறுகையில்,’ பெங்களூரு ஹிம்மத் நகரை சேர்ந்த அபிலாஷ். இவரும் அவர் நண்பர்கள் மூன்று பேரும் செவ்வாய் மாலை பன்னார்கட்டா உயிரியல் பூங்காக்கு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினம் வார விடுமுறை. அதனால் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதனால் அவர்கள் மூன்று பேரும் திருட்டுத்தனமாக உள்ளே சென்றுள்ளனர். மது போதையில் இருந்ததாக தெரிகிறது. யானைகளை அடைத்து வைக்கும் இடத்திற்கும் அவர்கள் நுழைந்துள்ளனர். அங்கு சுமார் 20 யானைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த சுந்தர் எனும் 16 வயது யானையுடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். ஆனால் ஆத்திரமடைந்த சுந்தர் அபிலாஷை தாக்கியுள்ளது. இதைப்பார்த்த அவரது நண்பர்கள் மூவரும் தப்பி ஓடியுள்ளனர். அன்று மாலை 6.30 மணிக்கு அங்கு வந்த பணியாளர்கள் அபிலாஷ் இறந்து கிடந்ததை பார்த்துள்ளனர்.

இதையடுத்து போலீசாருக்கு அவர்கள் தகவல் அளிக்க இது தொடர்பாக அபிலாஷ் நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.