Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

தண்ணீர் கேட்டதால் அதிர்ச்சி: பிணத்துடன் சுற்றிய லாரி ஓட்டுநர் !


அமெரிக்காவில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்று எட்டு பிணங்களுடன் சுற்றியுள்ளது.

அமெரிக்காவின் சான் ஆன்டோனியோ மாகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு லாரி ஒன்று வழக்கம் போல் சரக்கு ஏற்றிக் கொண்டு சென்றுள்ளது.

அப்போது லாரிக்குள் இருந்த சிலர் ஓட்டுனரிடம் தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத லாரி ஓட்டுனர், சரக்கு லாரிக்குள் எப்படி மனிதர்கள் என்று அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

உடனடியாக லாரி இருக்கும் பகுதிக்கு வந்த பொலிசார் லாரியை சோதனை செய்துள்ளனர். அப்போது லாரிக்குள் 38 பேர் இருந்ததாகவும், அதில் இரண்டு பள்ளிக் குழந்தைகள் மற்றும் 8 பேர் இறந்துகிடந்தும் தெரியவந்துள்ளது.

இதில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.