Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

கண்ணீர் மல்க பேசிய பாலாஜியின் மனைவி : நடிகர் தாடி பாலாஜி மீது மீண்டும் பொலிஸில் புகார் !


நடிகர் தாடி பாலாஜி பிரபல ரிவியில் மிகவும் பிரபலமானவர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. இவர்களுக்கு போர்ஷிகா என்ற 6 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது.
சமீபத்தில் இவரது மனைவி நித்யா, சாதி பெயரை சொல்லி தாடி பாலாஜி அடித்து துன்புறுத்துவதாக மாதவரம் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இவரை சமாதானப்படுத்த எடுத்த முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.

மற்றவர்களின் பேச்சை கேட்டு தன் மீது நித்யா பழிசுமத்துவதாகவும், மனைவிக்காக சிறைக்கு கூட செல்லத் தயார் எனவும் தாடி பாலாஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த நித்யா, இன்று தனது கணவர் பாலாஜி மீது மீண்டும் ஒரு புகார் மனு அளித்தார். அதில் “தனது கணவர் பாலாஜி தன்னை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, சாதி பெயர் சொல்லி என்னை இழிவுபடுத்தி பேசியும், என்னை பல முறை அடித்தும் கடுமையான தொல்லை கொடுத்து வந்தார்.

மேலும், பல ஆண்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாக கூறி என்னை சித்ரவதை செய்து வந்தார். அவர் மீது ஏற்கனவே போலீசாரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.