Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2017

அமெரிக்கா - தென் கொரியா போர் ஒத்திகை: வட கொரியாவிற்கு பதிலடி !


பல்வேறு எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வட கொரியாவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டுப்படைகள் பிரமாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா.வின் எதிர்ப்பை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகின்றது. அந்நாட்டின் மீது ஐ.நா பொருளாதார தடை விதித்துள்ள போதிலும்  வட கொரியா எதையும் பொருட்படுத்தவில்லை.

சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா வரை சென்று தாக்கி அழிக்க கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனையை வட கொரியா செய்தது. இந்நிலையில் தென் கொரியா ராணுவத்துடன் இணைந்து அமெரிக்க படைகளும் கூட்டாக போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாடுகளையும் சேர்ந்த விமானங்கள் நேற்று வானில் பறந்து குண்டு மழை பொழிந்தன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.