July 8, 2017
பாரத மாதாவை அவமரியாதை செய்தாரா: திமுக மாஜி அவைத்தலைவர் மகன் ?
தாமரைப்பூ மீது நிர்வாண நிலையில் பெண் ஒருவர் நின்றுக் கொண்டு தேசியக் கொடியை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் படத்தை பேஸ்புக்கில் வெளியி ட்டதற்கு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர் அருகேயுள்ள உடன்குடியில் கடை நடத்தி வருபவர் குதுப்தீன். கடந்த சில நாள்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நண்பர் ஒருவர் விவசாயிகள் குறித்து பதிவிட்ட தற்கு பதில் கருத்தை குதுப்தீன் வெளியிட்டார்.
அதில் இந்திய வரைபடத்தின் உள்ளே ஒரு பெண் நிர்வாணமாக தாமரை பூ மேலே நின்று கொண்டு கையில் தேசியக் கொடியை வைத்திருப்பது போல் வரையப்பட்ட போட்டோவை எடுத்து பதிவேற்றம் செய்திருந்தார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுகுறித்து இந்து முன்னணியினர் குலசேகரப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் குதுப்தீனை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் உடன்குடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குதுப்தீன், திமுக முன்னாள் அவைத்தலைவர் ரிபாதீன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத மாதாவை அவமரியாதை செய்தாரா: திமுக மாஜி அவைத்தலைவர் மகன் ?
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.