Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

சிங்கம் களம் இறங்கிடிச்சி: கதிராமங்கலம் போராட்டக்களத்தில் விஜயகாந்த் !


கதிராமங்கலம் போராட்டக்களத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குதித்துள்ளார். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் பங்கேற்று அவர் பெசியதாவது:

1990முதல் இப்பகுதியில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடந்து வருகிறது. கழிவுகள் கொட்டப்படுவது தெரியவந்ததும் பிரச்சனை என்னவென மக்களுக்கு தெரியவந்தது.

தமிழக மக்களுக்கு ஒப்புதல் இல்லாத திட்டங்கள் திமுக, அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்டவை. மக்களுக்கு உதவாத இத்திட்டங்களை எதிர்த்து போராடுவது நமது கடமையாகும். போராட்டத்தில் ஈடுபடும்மக்களை ஒடுக்க காவல்துறை நினைக்க கூடாது.

கதிராமங்கலம் போராட்டத்துக்கு தேமுதிக எப்போதும் துணை இருக்கும். மக்களின் ஆதரவில்லா எத்திட்டத்தையும் தூக்கி எறிய அரசுகள் தயாராக இருக்க வேண்டும். அதுவே அரசின் கடமை என்றார் விஜயகாந்த். முன்னதாக கதிராமங்கலத்தில் எண்ணெய் எடுக்கப்படும் இடங்களை அவர் பார்வையிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.