July 11, 2017
மனித சங்கிலி போராட்டம்: ஜவுளி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் !
ஜிஎஸ்டி வரிக்கு எதிராக ஈரோட்டில் ஜவுளி நிறுவனங்கள் 5 ஆவது நாளாக கடையடைப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் 5 சதவீதம் சேவை வரி விதித்தது மட்டுமில்லாமல், வரிவிலக்கு விற்பனையின் அளவினை 20 லட்சமாக குறைத்திருப்பதை கண்டித்தும், ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியும் கடந்த ஜூலை 6 தேதி முதல் ஈரோட்டிலுள்ள ஜவுளி நிறுவனங்கள் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டம் திங்களன்று 5 வது நாளாக தொடர்ந்தது. இதனால் ஈரோட்டிலுள்ள அனைத்து ஜவுளி நிறுவனங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், ஈரோடு பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள பிருந்தா வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, கனி மார்கெட், தினசரி மற்றும் வார சந்தைகள் என முக்கிய வீதிகளில் மனித சங்கிலி போராட்டங்கள் நடைபெற்றன. இதில் திருவேங்கடசாமி வீதி வியாபாரிகள் சங்க தலைவர் செந்தில், கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்த மனித சங்கிலி போராட்டத்தில் நூல் வியாபாரிகள் சங்கம், சைசிங் பேக்டரி உரிமையாளர்கள் சங்கம், சொக்கநாத வீதி வியாபாரிகள் சங்கம், வணிகர் நலம் நாடும் சங்கம், விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், ஸ்கிரீன் பிரிண்டர்ஸ் அசோசியேஷன், ஜிகர் பிளீசிங் ஒனர்ஸ் அசோசியேசன், கேலண்டர் மில் அசோசியேசன் உட்பட 25 சங்கங்களை சார்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும், இப்பிரச்சனையில் உரிய தீர்வு காண வலியுறுத்தும் வகையில் செவ்வாயன்று தமிழக முதல்வரை ஜவுளி உற்பத்தியாளர்கள் சந்தித்து முறையிட உள்ளனர். இதில் உரிய தீர்வு காணப்படாத பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டங்களை தீவிரப்படுத்த உள்ளனர்.
மனித சங்கிலி போராட்டம்: ஜவுளி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் !
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.