Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2017

புற்றுநோயைத் தடுக்கும் வாழை இலைச் சாப்பாடு !


நம் அடையாளங்களில் ஒன்றான வாழை இலைச் சாப்பாடு 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதுனா நம்புவீங்களா?. ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான நம் சிலப்பதிகாரத்தில் இதைப் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானது, பயன்படுத்த எளிதானது மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதால் சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை எண்ணி நம் முன்னோர்களின் அறிவியலை நினைத்து நம்மை மீண்டும் ஒருமுறை வியக்க  வைக்கிறது.

சமீப காலமாக க்ரீன் டீ அருந்துவது ஃபேஷனாக உள்ளது, க்ரீன் டீயில் இருக்கும் Epigallocatechin gallate (EGCG)  போன்ற பாலிபினால்ஸ்கள் வாழை இலையில் அதிக அளவில் உள்ளன. இது பல நோய்களிடமிருந்து நம்மை  காத்துக்கொள்வதற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று அதிகம் பரவி வரும் புற்றுநோய் உட்பட பார்கின்சன் நோய் (Parkinson’s disease) எனப்படும் நடுக்குவாத நோய் வராமலும் நம்மை காக்கிறது. இன்று பலரின்  பயமாக இருக்கும் நோய்க்கு அன்றே தீர்வு கண்டுள்ளனர் நம் முன்னோர்கள். இந்த இலையை நேரடியாக உண்பது நம் ஜீரண சக்திக்கு அப்பாற்ப்பட்டது என்பதால் இதன் நன்மைகள் நம் உடலுக்கு சென்றடையும் விதமாக அதில் உணவருந்துவதைப்  பழக்கமாக கொண்டிருந்துள்ளனர்.

வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பல நன்மைகளில் சில:

பெரும்பாலும் ஆண்களுக்கு வரும் புரோசுட்டேட் புற்றுநோய் எனப்படும் முன்னிற்குஞ்சுரப்பி புற்றுநோயைத் தடுக்கும் பாலிபினால்ஸ் (Polyphenols) வாழை இலையில் அதிகளவில் உள்ளதாக சமீபத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அபரிவிதமான ஆக்ஸிஜனேற்றிகள் (Antioxidant) இருப்பதால் பல தீவிர நோய்களைத் தடுப்பதற்கும், நம் சருமப்  பாதுகாப்பிற்கும் மிகவும் சிறந்தது. இதிலிருக்கும் ரூட்டின் (Rutin), குளுக்கோஸ் ஹோமியோஸ்டினை சீர்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது, இரத்த உறைவு, மாரடைப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தப்படுத்துகிறது. ரூட்டின் ஒரு சிறந்த  ஆக்ஸிஜனேற்றியாகும்.

வாழை இலை ஒரு இயற்கை கிருமி நாசினி, இதில் உணவருந்தும் போது உணவில் உள்ள நச்சு தன்மையை போக்குவதுடன்  நம் உடலில் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.

நாம் நாகரீகம் என்ற பெயரில் நம் பழமையின் அரிய நன்மைகளை மறந்து இயற்கையை பாழ்படுத்தாமல், மூடநம்பிக்கையை அகற்றி அதில் பொதிந்திருக்கும் ரகசியங்களைக் கண்டு கடைப்பிடிக்கலாமே!. நல்ல விஷயங்களை ஏத்துகிறது நல்லதுதானே. இயற்கையான முறையில் வளர்ந்த வாழை இலைக்குதான் இத்தனை மகிமையும், பேப்பர் வாழைக்கு இல்ல!!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.