July 17, 2017
பழிவாங்கிய கர்நாடக அரசு: டிஐஜி ரூபா பணியிட மாற்றம் !
பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக டிஜிபிக்கு அறிக்கை அளித்து பரபரப்பை ஏற்படுத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும் அதற்காக சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் லஞ்சம் பெற்றதாகவும் குற்றம் சாட்டினார் சிறைத்துறை டிஐஜி ரூபா.
இந்நிலையில் அவர் போலீஸ் மற்று சிறைத்துறை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டியளித்ததாக கூறிய அம்மாநில முதல்வர் சித்தராமையா அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக பொறுப்பேற்றுக்கொண்டார் ரூபா. இவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டு டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பினார். அதில் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் இதற்காக சிறைத்துறை டிஜிபி 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
மேலும் இது தொடர்பாக அடிக்கடி ரூபா ஊடகங்களையும் சந்தித்து விளக்கம் அளித்தார். இதனால் இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி சத்திய நாராயணராவ் ரூபாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தார்.
ஆனாலும் ரூபா தன்னுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதாக மீண்டும் ஊடகங்களை சந்தித்தார். இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டு அதற்கான குழுவையும் அமைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அதே நேரத்தில் சிறைத்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக டிஐஜி ரூபா உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அரசின் கவனத்துக்கும் கொண்டுவந்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கு முன்னரே ரூபா ஊடகங்களில் பேசியது தவறானது. அவர் அடிக்கடி மீடியாவை சந்தித்து பேசியது சரியானது அல்ல. போலீஸ் மற்றும் சிறைத்துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கென்று சில விதிமுறைகள் உள்ளன. ரூபா பேட்டி கொடுத்தது விதிமுறை மீறிய செயலாகும். எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி ரூபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதா என்பதை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள குழு தனது விசாரணையை இன்று ஆரம்பிக்க உள்ள நிலையில் அவரை கர்நாடக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக உள்ள ரூபாவை பெங்களூரு நகர போக்குவரத்து ஆணையராக மாற்றம் செய்துள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் குற்றச்சாட்டில் சிக்கிய டிஜிபி சத்திய நாராயணராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பழிவாங்கிய கர்நாடக அரசு: டிஐஜி ரூபா பணியிட மாற்றம் !
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.