Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

திருமண நாள் குறித்து கெளசல்யா சங்கர் எழுதிய உருக்கமான வரிகள் !


உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த கெளசல்யாவும் சங்கரும் காதலித்தனர்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களின் காதலுக்கு கெளசல்யாவின் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்தது.

அதை மீறி திருமணம் செய்துகொண்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் தொடங்கிய இந்த ஜோடியை சாதி அரக்கன் விடவில்லை.

சென்ற ஆண்டு மார்ச் மாதம் 13-ம் நாள் நடுவீதியில் வைத்து சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கெளசல்யா பலத்த காயத்துடன் உயிர் தப்பினார்.

மக்கள் பலரும் சூழ்ந்திருக்க நடந்த இந்தப் படுகொலை, தமிழகம் முழுவதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கெளசல்யா உறவினர்கள் சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.கணவரின் இழப்பின் துயரத்தால் சில நாள்கள் சோர்ந்திருந்தார் கெளசல்யா.

தனது கணவரை பலி வாங்கிய சாதிக்கு எதிரான போராட்டங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.

கெளசல்யா தலைமையில் சாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

முற்போக்கு கருத்து கொண்டோர், கெளசல்யாவை தங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்று மரியாதை செய்கிறார்கள்.

தன் வாழ்வில் நடத்தப்பட்ட துயரத்தை நினைத்து முடங்கி விடாமல், துணிவோடு களத்தில் நிற்கும் கெளசல்யா, பொதுவெளியில் தனது கருத்துகளை துணிவுடன் பதிவு செய்து, பலருக்கும் ஊக்கச் சக்தியாக இருக்கிறார்.

கெளசல்யா - சங்கர் இருவரின் திருமண நாள் இன்று.

அந்த நாளின் நினைவை வெளிப்படுத்தும் விதத்தில், கெளசல்யா தனது முகநூலில் உருக்கமான கவிதை ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்தக் கவிதை வருமாறு-

இந்நாள்!

அம்மாவின் சாயலைக் கொண்டவளென்று - எம்மைக் கண்டதும் கூறினாய்!

அதற்கு நான்,பொதுவான வார்த்தைகளிட்டு-பொருத்தமாக இருக்காதென்றேன். நீ கண்ணியமாக-என்னை விட்டு கலைந்து சென்றாய்!

"சிறு இடைவெளியோடு"மறுமுறை உனது பேச்சு- "மன்னிப்பிலிருந்தது"

நீ தவறு செய்து விட்டாய்-என்பதற்காக "அல்ல"நான் உனது - "தாய்மை" எண்ணத்தை -"தவறாக" -நினைத்திடாது இருப்பதற்கா!

நீ கடந்தஅந்நிமிடமே தாமதம்-இன்றும் காரணமில்லை-

"என்னிடம்"உனது நினைவிற்கு மாறாகத்தான்-நினைத்தேன்.

உண்டான இடைவெளியை-நமக்குள்-ஏனின்னும் உடைக்கவில்லையென்று!

கல்லூரி நண்பன்-என்றெனது-காதல் கணவனாவான் -எனநினைத்தேன்!

நாம் நினைத்தது-நிறைவேறியது-நாம்நினைத்தவைகள்-நிறைவேறவில்லை!

நமது காதல்-நாமறிந்து-பாராட்டிக் கொண்ட போதுநமது காதலை - எமது வீடறிந்து விட்டது.

"சாதி-சனத்தை" மனதில் நிறுத்திவழக்கம் போல்-எம்மைப் பெற்றவர்கள்-தன்வேலை பார்க்கையில்!

நமக்கான- கால இடைவெளி ஏதுமின்றி-இரு கரம் கோர்த்தோம்.சாதியையும் உடைத்தோம்!

உடைந்த சாதியை-இணைக்க "எண்ணி"எண்ணற்ற கனவுகளோடு-

எதிர்காலம் நோக்கிஊடலும்,கூடலுமின்றி-இணைந்திருந்த நம்மை,

பிரித்து வைத்து விட்டார்கள்-மரணப் பரிசு கொடுத்து.

உன்னை-எம்மிடமிருந்து-என்னை உம்மிடமிருந்து.

ஆனால்?நமது மனமும்-மனதின் நினைவும்-எவராலும்- பிரித்திட இயலாதவையடா

எனது மணவாளா!ஈருயிராக இருந்தது இன்று-ஓருயிராகிவிட்டது.

சாதியைச் - சவக்குழியேற்றுவேனென்றுஉன்மேல் உறுதியெடுத்துக்-கூறுகிறேன்.

இன்று நமது இரண்டாமாண்டு-"மண நாளடா"

Thanks - Vikatan

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.