Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 15, 2017

டிராபிக் ராமசாமி ஆவேசம்: தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும் !


தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும் என தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆவேசமாக கூறினார்.

ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் உள்ள தனது அலுவலகம் உள்ள கட்டடத்தின் 4வது மாடியில் ஏறி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் கொள்ளை ஆட்சி ஒழிய வேண்டும். அதிமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் கதிராமங்கலம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுவிக்க வேண்டும். கதிராமங்கலத்தில் பெண்களை போலீசார் மிரட்டியுள்ளனர். தஞ்சாவூர் எஸ்.பி.மகேஷ்குமார் மீது் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கூறினார். அரசு, நீதிமன்றம் எல்லாவற்றின் மீதும் நம்பிக்கை போய்விட்டது எனக் கூறிய அவர், நம்பிக்கை இல்லாததால் சாவதே மேல் என முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் உருக்கமாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.